ரத்தக் களரியில் பங்குச் சந்தை, சென்செக்ஸ் 96 புள்ளிகள் குறைந்தது!!

சென்செக்ஸ் 96 புள்ளிகள் குறைந்து 35468 இல் வர்த்தகம் தொடங்கியுள்ளது. 

Last Updated : Mar 11, 2020, 11:44 AM IST
ரத்தக் களரியில் பங்குச் சந்தை, சென்செக்ஸ் 96 புள்ளிகள் குறைந்தது!! title=

கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா பீதி போன்ற உலக நிலவரங்களால் வாரத்தின் முதல் வர்த்தக தினமான புதன்கிழமை அன்று பங்கு வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 96 புள்ளிகள் குறைந்து 35468 இல் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதேபோல், 42.70 புள்ளிகள் சரிவுடன் நிஃப்டி 10,502 இல் திறக்கப்பட்டது.

நாட்டில் யெஸ் வங்கியின் வணிகத்தின் நேரடி தாக்கமும் வளைகுடா நாடுகளின் வீழ்ச்சியும் இந்திய சந்தையில் இத்தகைய மாற்றத்தை காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.  எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள், அன்னிய முதலீடு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு போன்ற உலக நிலவரங்கள் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார புள்ளிவிவரங்கள் இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கை முடிவு செய்யும் என ஆய்வாளர்கள் தெரிவித்து இருந்தனர். அதை உறுதி செய்யும் விதமாக பங்குச் சந்தைகள் ரத்தத்தில் குளித்தன.

இந்நிலையில் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 96 புள்ளிகள் குறைந்து 35468 இல் வர்த்தகம் தொடங்கியுள்ளது. இதேபோல், 42.70 புள்ளிகள் சரிவுடன் நிஃப்டி 10,502 இல் திறக்கப்பட்டது.

 

Trending News