அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிஜேந்திர நரேன். இவர் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து, மத்திய உள்துறை அமைசக்கதில், அந்தமான் நிக்கோபார் தீவுகள் போலீசார் தரப்பில் நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதாவது, ஐஏஎஸ் அதிகாரி நரைன், மற்றொரு அதிகாரியான ஆர்எல் ரிஷி உள்பட பல பேரால் தான் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதாக 21 வயது பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தார். அவர் போலீசாரிடம் புகார் அளித்தை அடுத்து, போலீசார் உள்துறை அமைச்சகத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
போலீசார் சமர்பித்த இந்த அறிக்கையை தொடர்ந்து, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜிஜேந்திர நரேன், இடை நீக்கம் செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில்,"ஜிதேந்திர நரேன் தரப்பில் கடுமையான தவறான நடத்தை மற்றும் பதவியை தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான சாத்தியக்கூறுகளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், சட்டப்படி சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, ஜிதேந்திர நரேன் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம், பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் அந்த பெண் இரண்டு முறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், சம்பவம் நடந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றும்படி பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஏனென்றால், அதில் முன்னாள் தலைமை செயலாளர் ஜிஜேந்திர நரேன் வந்து சென்றதற்கான ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் வேலை தேடி வந்தபோது, ஹோட்டர் உரிமையாளர் ஒருவர் மூலம் இவரை ஆர்எல் ரிஷியிடம் ஒருவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர்தான் ஜிஜேந்திர நரேனின் வீட்டிற்கு அழைத்துச்சென்றதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
ஆர்எல் ரிஷி அந்த பெண்ணை ஜிஜேந்திர சர்மாவின் வீட்டிற்கு அழைத்துச்சென்ற பின்னர், அவருக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். அதை அந்த பெண் குடிக்க மறுத்ததாகவும், தனக்கு நிச்சயம் வேலை வாங்கி தருவதாகக் கூறி தன்னை கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் நியமனம்; குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ