பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று, குர்தாஸ்பூருக்கு அருகிலுள்ள இந்திய எல்லைக்குள் நுழைந்தது. அதனை இந்திய பாதுகாவல் படை விரட்டியடித்தது
பஞ்சாபின் (PUNJAB) குர்தாஸ்பூரில் உள்ள தாகூர்பூர் கிராமத்தின் மீது ட்ரோன் சுற்றிக்கொண்டிருப்பதை பாதுகாப்புப் படையினர் கண்டனர். இதை அடுத்து பாதுகாப்புப் படையினர் (BSF) இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பஞ்சாபின் தாகூர்பூர் கிராமத்தில் இந்தோ-பாகிஸ்தான் எல்லையில் (India-Pakistan Border) நிறுத்தப்பட்டுள்ள இரண்டு எல்லை பாதுகாவல் படை ஜவான்களுக்கு நேற்று இரவு 11.35 மணியளவில் ஒரு சத்தம் கேட்டதாக போலீசார் தெரிவித்தனர். இரு வீரர்களும் பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதோ சத்தம் வருவதாகக் கூறி படிப்படியாக இந்திய எல்லைக்குள் இந்த சத்தம் அருகில் கேட்பதாகவும் தெரிவித்தனர்
பாதுகாப்புப் படையை சேர்ந்த தேவேந்தர் குமார் மற்றும் அசோக் குமார் ஆகியோர் பறக்கும் பொருளை இந்திய எல்லைக்குள் நுழைந்தவுடன் உடனடியாக, அதை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். தாக்குதலுக்கு உள்ளான ட்ரோன் பின்னர் பாகிஸ்தானின் எல்லைக்கு திரும்பியது.
இருப்பினும், பறக்கும் பொருளின் சத்தம் அதிகாலை 12.22 மணியளவில் தாகூர்பூரில் ரோந்து பணியில் இருந்த முகேஷ் யாதவ் என்ற மற்றொரு வீரருக்கு மீண்டும் கேட்டது. சம்பவ இடத்தில் இருந்த தேவேந்தர் மற்றும் அசோக் குமார் மீண்டும் ட்ரோன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
ட்ரோன் சுமார் 400 மீட்டர் உயரத்தில் சுமார்1800 மீட்டர் அளவிற்கு, இந்திய எல்லைக்குள் தொடர்ந்து பறந்து சென்றது, இறுதியில் குர்தாஸ்பூரில் உள்ள தாக்பூர் கிராமத்தில் முன்னர் திரும்பி சென்ற அதே இடத்திலிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பியது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, எல்லை பாதுகாப்புப் படை (BSF) கமாண்டன்ட் என் கங்குலி சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கே அவரது மேற்பார்வையில் அந்தப் பகுதியில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச எல்லையில், எல்லையின் மறுபக்கத்தில் இருந்து ட்ரோன்கள் அல்லது குவாட்காப்டர்கள் காணப்படுவது இது முதல் தடவை அல்ல. இதுபோன்ற பல நிகழ்வுகள் சமீபத்திய காலங்களில் பதிவாகியுள்ளன.
மேலும் படிக்க | SAI: இந்திய ராணுவ வீரர்களுக்கான பிரத்யேக app அறிமுகம்!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR