INX மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு தீர்ப்பை ஒத்திவைத்தது SC!

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

Last Updated : Nov 28, 2019, 02:18 PM IST
INX மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு தீர்ப்பை ஒத்திவைத்தது SC! title=

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது!

டெல்லி: INX மீடியா பணமோசடி வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த காங்கிரஸ் தலைவர் சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
 
INX நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் உடனடியாக அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தது. அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில், ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது.

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், இன்று நடந்த இறுதிக்கட்ட வாதத்தின்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 16 நிறுவனங்களை ஆய்வு செய்ததில், ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் அமலாக்கத்துறை கூறியது. இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் சீலிட்ட கவர்களில் தாக்கல் செய்யப்பட்ட 3 செட் அறிக்கைகளை பாதுகாப்பாக வைக்கும்படி பதிவகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். 

 

Trending News