ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில்
ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு!!
டெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யாமல் இருக்க, ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
INX மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாக சிபிஐயும் அமலாக்கத்துறையும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் முன்ஜாமீன் கோரி முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் இதற்க்கு தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு புகார் தொடர்பான வழக்குகள் சரியான பாதையில் செல்படுவதாக கூறிய நீதிபதிகள், ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டனர். முன்ஜாமீன் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை அல்ல என்று கூறி அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். விசாரணை நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினர்.
Supreme Court says P Chidambaram can move regular bail application before the trial court, for regular bail. https://t.co/3TaMYpzfxj
— ANI (@ANI) September 5, 2019
மேலும், விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ப.சிதம்பரத்துக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் விசாரணைக் காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக அவரை அமலாக்கத்துறையும் கைது செய்ய தயாராகி வருகிறது.