வெங்காய மாலை அணிந்து சட்டமன்றத்துக்கு வந்த MLA-வால் சட்டமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது!
கிடைத்த தகவல்களின்படி, பீகார் சட்டமன்றத்தில் இன்று ஒரு MLA வெங்காய மாலை அணிந்து ஒரு விசித்திரமான தோற்றத்தில் சட்டமன்றத்திற்கு வந்துள்ளார்.
ராஜபக்கட்டை சட்டமன்ற தொகுதி MLA சிவசந்திர ராம் தான் வெங்காயம் மாலை அணிந்து பிகார் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். வெங்காயம் விற்கும் விலையினை கண்டித்து, தங்க மாலைக்கு மாறாக வெங்காயம் மாலை அணிந்து வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது செயல் வெங்காய விலை விவகாரம் தொடர்பாக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என தான் எதிர்பார்ததகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயரும் விலைகள் மக்களுக்கு அவர்களின் சாதாரண உணவை பெறுவதில் கூட சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என சிவசந்திர ராம் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில்., வெங்காயத்தின் விலை முன்பு ஒரு கிலோ ரூ.50 க்கும் குறைவாக இருந்தது, ஆனால் தற்போது அது ஒரு கிலோ ரூ.80-னை தாண்டியுள்ளது. நான் எனது மாலைக்கு வெங்கயாம் வாங்கும் போது கிலோ ஒன்றுக்கு ரூ.100 கொடுக்க வேண்டி இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மறுபுறம், பீகாரின் முதல்வர் நிதீஷ் குமார், தனது அரசாங்கத்தில் காய்கறிகள் கிலோ ஒன்று ரூ.35-க்கு விற்கப்படுகிறது என தெரிவித்து வருகிறார். ஆனால் நான் இதுவரை அப்படி ஒரு கடையினை பார்க்கவில்லை. இன்று நான் சட்டமன்றத்திற்குள் இந்த வெங்காய மாலையுடன் செல்ல இருக்கிறேன். இதை பார்த்தாவது இந்த அரசாங்கம் வெங்காய விலையேற்றம் தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன். பிகாரின் மக்கள் ரூ.10-க்கு வெங்காயத்தினை விற்கும் அளவிற்கு மாற்றத்தை இந்த அரசாங்கம் கொண்டு வர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்