CBSC முதலிடம் பிடித்த மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!

சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யபட்டவிவகாரம் அரியானா அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது...! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2018, 05:11 PM IST
CBSC முதலிடம் பிடித்த மாணவியை கடத்தி கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்! title=

சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யபட்டவிவகாரம் அரியானா அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது...! 

ஹரியானாவில் நேற்று மாலை பயிற்சி வகுப்புக்குச் சென்று கொண்டிருந்த கல்லூரி மாணவியை, காரில் வந்த சிலர் கடத்திச் சென்று கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. வழியில் 5-க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் வழிமறித்து காரில் அப்பெண்ணை கடத்தி சென்றனர். மாணவியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு தூக்கிச்சென்று மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர். இதை தொடர்ந்து கனினா என்ற பகுதியில் உள்ள பேருந்து நிறுத்ததில் அந்தப் பெண்ணை காரிலிருந்து கீழே வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து அந்தப் பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் புகாரை போலீசார் வாங்க மறுத்து உள்ளனர்.

தாம் பல போலீஸ் நிலையங்களுக்குச்  சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க அங்கு மறுத்த பின் அவர் நேரடியாக காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார். அவர் இந்த புகாரை பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தயார் கூறுகையில், சிபிஎஸ்இயில் அதிக மதிப்பெண் பெற்றதற்காக குடியரசுத் தலைவர், பிரதமரிடம் பாராட்டுப் பெற்ற தமது மகள் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெண் குழந்தைகளுக்கு கல்வி தருவோம், பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற பிரதமரின் கூற்று எப்படி சாத்தியமாகும் என அவரது தாயார் உருக்கமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும், அரியானாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்த கொடூர சம்பவம் மீண்டும் கவனத்தைத் திருப்பியது. அரியானா முதல்வர் "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கூறி உள்ளார்.

முன்னாள் முதல்வர் பூபீந்தர் சிங் ஹூடா மாநிலத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை விரைவில் மோசமடைந்து வருவதாகக் கூறி உள்ளார். "இது அரியானாவில் மட்டும் நடந்த சம்பவம் அல்ல, அவர்கள் (பிஜேபி அரசாங்கம்) மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை அழித்திருக்கிறது எனவும் அவர் கூறினார்.

 

Trending News