புதுடில்லி: ஜனவரி 26 ஆம் தேதி தேசிய தலைநகரில் நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி காவல்துறையினரால் எஃப்.ஐ.ஆரில் பெயரிடப்பட்ட பஞ்சாபி நடிகரும் பாடகருமான தீப் சித்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை உறுதிப்படுத்திய டெல்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை தீப் சித்து சிறப்புப் படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
Deep Sidhu, an accused in 26th January violence case arrested: Delhi Police Special Cell
— ANI (@ANI) February 9, 2021
Delhi Police have arrested Deep Sidhu, an accused in 26th January violence case.
(Picture taken after arrest; source: Delhi Police) pic.twitter.com/RBLYbrGfik
— ANI (@ANI) February 9, 2021
ஜனவரி 26 ம் தேதி நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறையில் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய உதவும் தகவல் தருபவர்களுக்கு தலா ரூ .1 லட்சம் ரொக்க வெகுமதி அளிக்கப்படும் என தில்லி காவல்துறை புதன்கிழமை அறிவித்தது. தகவல்களின்படி, தில்லி காவல்துறை (Delhi Police) பஞ்சாபி நடிகர் தீப் சித்து, ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங் மற்றும் குர்ஜாந்த் சிங் ஆகியோரின் கைதுக்கு உதவக்கூடிய தகவல்களுக்கு ரூ .1 லட்சம் வெகுமதியை அறிவித்திருந்தது.
மேலும், ஜனவரி 26 வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஜஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங் மற்றும் இக்பால் சிங் ஆகியோரின் கைதுக்கு உதவும் தகவல்களுக்கு தலா ரூ .50,000 ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டது.
டெல்லி காவல்துறையினரின் கூற்றுப்படி, எஃப்.ஐ.ஆர்-களில் பெயரிடப்பட்டவர்கள் அனைவரும் செங்கோட்டையில் (Red Fort) மதக் கொடியை (நிஷான் சாஹிப்) ஏற்றியதற்காகவும், குடியரசு தினத்தன்று நிகழ்ந்த வன்முறைக்காகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இதன் மூலம், ஜனவரி 26 ம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது வெடித்த வன்முறை குறித்த விசாரணையை டெல்லி காவல்துறை தீவிரப்படுத்தியது. அடையாளம் காணப்பட்ட 12 கலகக்காரர்களுக்கு எதிராக பெரிய அளவிலான தேடல் தொடங்கியது.
ALSO READ: ”இடத்தை காலி பண்ணுங்க”... தில்லி சிங்கு எல்லையில் போராடுபவர்களை விரட்டும் உள்ளூர் மக்கள்
விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு என்ற பெயரில் ஜனவரி 26 ம் தேதி வன்முறைக்கு காரணமாக இருந்த மற்ற கலவரக்காரர்களையும் போலீசார் தற்போது அடையாளம் கண்டு வருகின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு, குடியரசு தினத்தன்று தேசிய தலைநகரில் நடந்த வன்முறைகளுக்கு காரணமான கலகக்காரர்களை அடையாளம் காண தடயவியல் குழுவின் உதவியை எடுக்கத் தொடங்கியுள்ளது.
ஜனவரி 26 ம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பான பல வீடியோக்களை குற்றப்பிரிவு கைப்பற்றியுள்ளது. தடயவியல் குழுவின் உதவியுடன் தில்லி காவல்துறை, அந்த வீடியோக்களில் இருந்து கலகக்காரர்களின் மங்கலான முகங்களை அடையாளம் கண்டுள்ளது.
ஜனவரி 26 ம் தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் (Tractor Rally) போது கட்டைகள் மற்றும் கம்பிகளை ஏந்தி வன்முறையில் ஈடுபட்டதாக வீடியோவில் காணப்படும் 12 பேரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். டிராக்டர் பேரணியின் போது இந்த குற்றவாளிகள் வன்முறையில் ஈடுபட்டதோடு செங்கோட்டை உட்பட பல இடங்களில் போலீஸ்காரர்களையும் தாக்கியுள்ளனர் என காவல்துறை கூறியுள்ளது.
ALSO READ: டிராக்டர் பேரணி கலவரத்தில் இறந்தவர் புல்லெட் காயத்தால் இறக்கவில்லை: Postmortem Report
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR