புதுடில்லி: 2018-19 ஆண்டிற்கான இடைக்கால ஈவுத் தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
2018-19 ஆண்டிற்கான இடைக்கால ஈவுத் தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தரவேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வந்தது ஆனால் ரிசர்வ் வங்கியோ 100 கோடி ரூபாய் மட்டுமே தான் ஒதுக்கியுள்ளது.
கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில் பல அதிரடி அறிவிப்புக்கள் வெளியாகின. இந்த அறிவிப்புக்களால் அரசுக்கு நிதிச்சுமை அதிகரித்து உள்ளது. இதனை ஈடுசெய்ய இன்று ரிசர்வ் வங்கி அதிகாரிகளுடன் அருண் ஜேட்லீ ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 28,000 கோடி இடைக்கால ஈவுத்தொகையை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. அதற்க்கான ஒப்புதலையும் ஆர்பிஐ அளித்துள்ளது.
ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 40,000 கோடிக்கு மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்டு (உபரித்தொகை) அளித்துள்ளது. தற்போது மேலும் ரூ. 28,000 கோடி அளித்துள்ளது. மொத்தம் இடைக்கால டிவிடெண்டாக மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ரூ. 68,000 கோடி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.