தற்போது நாம் பயன்படுத்தும் அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கம் நடைமுறையில் உள்ள நிலையில், இப்போது, தாகூர் மற்றும் அப்துல் கலாம் படங்களையும் நோட்டுகளில் அச்சிடுவது தொடர்பாக, ரிசர்வ் வங்கி முக்கிய முயற்சிகளை செய்து வருகிறது என தகவல் வெளியாகியது.
குருதேவ் என்று அழைக்கப்படும் ரவீந்திர நாத் தாகூர் மற்றும் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் புகைப்படமும் இந்திய ரூபாயில் காணப்படும் எனவும் இந்த இரண்டு முக்கிய மனிதர்களின் படத்தை இந்திய கரன்சியில் அச்சிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது எனவும் செய்திகள் வெளியானது.
கரன்சி நோட்டுகளில் பல இலக்க நீர்குறிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என கூறப்பட்டது.
மேலும் படிக்க | ரூபாய் நோட்டில் ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்கள்; RBI ஆலோசனை
இந்நிலையில், தற்போதுள்ள கரன்சி மற்றும் ரூபாய் நோட்டுகளில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ வங்கி தெளிபடுத்தியுள்ளது.
ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் உருவத்திற்கு பதிலாக வேறு தலைவர்களின் முகத்தையும் அச்சிடுவதன் மூலம் தற்போதுள்ள கரன்சி மற்றும் ரூபாய் நோட்டுகளில் மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. ரிசர்வ் வங்கியில் அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
மேலும் படிக்க | Financial Tips: பணத்தை திட்டமிட்டு சேமித்து பணக்காரர் ஆக சில டிப்ஸ்
கரன்சி நோட்டுகளில் பல்வேறு வகையான படங்கள் பயன்படுத்தப்படும் வழக்கம் உலகில் பல நாடுகளில் உள்ளன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க டாலர் நோட்டுகளில் ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன், ஆண்ட்ரூ ஜாக்சன் மற்றும் ஆபிரகாம் லிங்கன் உட்பட 19 ஆம் நூற்றாண்டின் அதிபர்களின் புகைப்படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR