மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, பணமதிப்பு, போலி ரூபாய் நோட்டுகள் ஆகியவை குறித்து பல வகையான செய்திகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. தற்போது வைரலாகும் ஒரு புதிய வீடியோவில், 500 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்திற்கு அருகில் பச்சை நிற பட்டை இருந்தால், அது போலி நோட்டு என்ற தகவல் பரவி வருகிறது. வழக்கமாக, ‘உண்மையான’ நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்திற்கு அருகில் தான் பச்சை நிற ஸ்ட்ரிப் இருக்கும் என்று வீடியோவில் கூறப்பாட்டுள்ளது. ஆனால், நீங்கள் அதிர்ச்சி அடைய வேண்டாம். இது குறித்த தகவலை ரிசர்வ் வங்கி தெளிவு படுத்தியுள்ளது.
சந்தையில் புழங்கும் 2 வகையான நோட்டுகள்
சந்தையில் இரண்டு வகையான 500 ரூபாய் நோட்டுகள் காணப்படுகின்றன. இரண்டு நோட்டுகளுக்கும் இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. இந்த இரண்டு வகையான நோட்டுகளில் ஒன்று போலி என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. எந்த ரூபாய் நோட்டுகள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | ஆதார் நம்பருடன் - மின்சார எண் இணைக்கணுமா? ரொம்பவே ஈசி, இத மட்டும் பண்ணுங்க
வீடியோவில் கூறப்படுவது என்ன?
இந்த வீடியோவில் அதில் ஒரு வகையான நோட்டு போலியானது என்று கூறப்படுகிறது. PIB இந்த வீடியோவைப் பற்றிய உண்மைச் சோதனையை மேற்கொண்டது. அதன் பிறகு அதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் அல்லது காந்திஜியின் படத்திற்கு மிக அருகாமையில் பச்சைக் கீற்று 500 ரூபாய் நோட்டை வாங்காதீர்கள், அது போலி ரூபாய் நோட்டு என்று வீடியோவில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும்
இந்தக் காணொளியின் உண்மைச் சோதனைக்குப் பிறகு, இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. சந்தையில் புழங்கும் இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும். உங்களிடம் இந்த வகை நோட்டுகள் இருந்தால் கவலைப்பட வேண்டாம். இரண்டு வகையான நோட்டுகளும் சந்தையில் புழங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வைரலாகும் செய்தியின் உண்மையைக் கண்டறியவும்
உங்களுக்கும் அப்படி ஏதாவது செய்தி வந்தால், கவலைப்படவேண்டாம். இது போன்ற போலி செய்திகளை யாரிடமும் பகிர வேண்டாம். இது தவிர, செய்தியின் உண்மைத் தன்மையை சரிபார்க்கலாம். இதற்கு https://factcheck.pib.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைப்பிற்கு செல்ல வேண்டும். இது தவிர, +918799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் அல்லது pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் வீடியோவை அனுப்பலாம். அதன் தகவல் உண்மையானதா என்பதை PIB உறுதி படுத்தும்.
மேலும் படிக்க | பங்கு சந்தையில் லாபத்தை அள்ள வேண்டுமா... ‘இந்த’ நிறுவன பங்குகளில் முதலீடு செய்யவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ