கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: சர்ச்சையை கிளப்பிய MLA ஜார்ஜ் பேச்சு....

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து கேரளவின் பூஜர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் எழுப்பிய கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...! 

Last Updated : Sep 9, 2018, 01:17 PM IST
கன்னியாஸ்திரி பாலியல் வழக்கு: சர்ச்சையை கிளப்பிய MLA ஜார்ஜ் பேச்சு.... title=

கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து கேரளவின் பூஜர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் எழுப்பிய கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...! 

கேரளாவின் கோட்டயம்  குரவிலங்காடுவில் உள்ள கான்வெண்டை சேர்ந்த   கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ப்ராங்கோ  மூலக்கல்(54) என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை  கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து இருந்தார். கன்னியாஸ்திரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கத்தோலிக்க அமைப்புகளுக்கு எதிராக முதல் முறையாக நேற்று கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் பலாத்காரம் செய்யப்பட்ட கன்னியாஸ்திரி குறித்து கேரளவின் பூஜர் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறியுள்ள புதிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, பிஷப் செய்தது சரி என நான் கூறிவில்லை. அதே சமயம் அந்த கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி உள்ளார். இது எப்படி சாத்தியமாகும். 12 முறை பலாத்காரம் செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் பலாத்காரம் செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

முதல் முறை பலாத்காரம் செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்? இப்படி பட்டவரை பாலியல் தொழிலாளி என நான் கூறியதில் என்ன தவறு உள்ளது? ஒருவேளை அவர் கற்புடன் இருந்திருந்தால் அவரை புனிதமானவராக கருதலாம். கற்பை இழந்த ஒருவரை எவ்வாறு கன்னியாஸ்திரியாக நடத்த முடியும்? பிஷப்புக்கு ஆதரவாக பேசவில்லை. பெண்களால் பாலியல் பலாத்கார சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று தான் சொல்கிறேன்.

முதலில் அந்த பிஷப் செய்தது அறுவறுப்பான செயல் என்று தான் நினைத்தேன். பின்னர் இந்த விவகாரத்தை முழுவதும் ஆராய்ந்த பார்த்த பிறகு தான், அந்த கன்னியாஸ்திரி தான் பிரச்சனைக்குரியவர் என புரிந்தது என்றார். ஜார்ஜ், பாலியல் பலாத்கார விவகாரத்தில் சர்ச்சை கருத்தை வெளியிடுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் குமாருக்கு ஆதரவாக பேசியதுடன், அந்த நடிகை மீது தவறு இல்லை என்றால் அவர் மீண்டும் நடிக்க வராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது...! 

 

Trending News