National Holiday Request for Ramar Temple Inauguration: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. அதாவது, இந்த நாளில் ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நடைபெறும். இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள், முகேஷ் அம்பானி, கௌதம் அதானி போன்ற தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞரின் கடிதம்
பல மாநிலங்களில் ஜனவரி 22ஆம் தேதியை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இப்போது ஜன. 22ஆம் தேதியை தேசிய விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படலாம் என தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. வழக்கறிஞர் ஒருவர் இந்திய குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜனவரி 22ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.
கன்ஷியாம் உபாத்யாய் என்ற அந்த வழக்கறிஞர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு ஜனவரி 22ஆம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிக்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "உலகின் எந்த நாகரீகத்திலும் (இந்து) கடவுள் ராமர் போன்ற எந்த ஆளுமையும் இந்த கிரகத்தில் பிறந்ததில்லை, மேலும் ராமர் தேசிய பெருமை மற்றும் இந்திய நாகரிகத்தின் ஒருங்கிணைந்த பகுதி ஆவார்.
மேலும் படிக்க | ராமர் நல்லாட்சியின் அடையாளம். ராமராஜ்ஜியத்தில் மக்களே ராஜாக்கள் -பிரதமர் மோடி
மற்ற இந்து பண்டிகைகளை போல்...
பொதுவாக உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியரின் சுவாசத்திலும் நரம்புகளிலும் கடவுள் ராமர் வாழ்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. விஷ்ணு அல்லது வேறு எந்த கடவுளின் மற்ற அவதாரங்களை விட ராமர் அதிகமானோரால் வழிபடப்படுகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
நாட்டு மக்கள் வரும் ஜனவரி 22ஆம் தேதியை தேசிய பண்டிகையாக கொண்டாட மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள், எனவே, நாட்டு மக்களின் மற்றும் குறிப்பாக, இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜன. 22ஆம் தேதி அன்று விடுமுறை அறிவிக்கப்படுவது விரும்பத்தக்கது. மற்ற இந்து பண்டிகைகளை போல் ஒரு தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் அவர், "இந்திய நாகரீகத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் கடவுள் ராமர் தவிர்க்க முடியாதவர். ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலான பெரும் போராட்டத்துக்குப் பிறகு, லட்சக்கணக்கான மக்களின் உயிர் தியாகத்துக்குப் பிறகு ராமஜென்ம பூமியில் (அயோத்தியில்) ராமர் கோயில் நிறுவப்பட்டது. இந்த தினம் ஆகஸ்ட் 15 (சுதந்திர தினம்) மற்றும் ஜனவரி 26 (குடியரசு தினம்) போன்ற வேறு எந்த தேசிய விழாக்களுக்கும் குறைவாகக் கருதப்படாது.
பல மாநிலங்களில் விடுமுறை
வரும் ஜனவரி 22ஆம் தேதி அன்று ராமர் கோவில் பிரான் பிரதிஷ்டான் நிகழ்வு தேசிய பெருமை மற்றும் தேசிய கொண்டாட்டத்தின் விஷயம், எனவே ஜனவரி 22 ஆம் தேதியை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டிய அவசர தேவை உள்ளது.
ஜனவரி 22 ஆம் தேதி தேசிய விடுமுறையாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் உத்தரப்பிரதேசம், கோவா, ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பிரான் பிரதிஷ்டா நடைபெறும் அந்நாளில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. உ.பி., உத்தரகாண்ட், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில், ஜன., 22ல், 'Dry Day' என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | "மோடி அரசியல் விழா" ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை -ராகுல் விளக்கம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ