வட இந்தியாவில் பிரபலமாக உள்ள ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தன்று கொண்டாப்படுகிறது. அந்த தினத்தில் பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் ராக்கி கட்டி சகோதர பாசத்தை வெளிபடுத்துவார்கள். பின்னர் சகோதரர்கள், அந்த பெண்மணிக்கு தங்களால் முடிந்த அன்பு பரிசை வழங்குவார்கள். இது இந்துக்கள் பண்டிகை என்றாலும், வேறு பல மதத்தை சேர்ந்த சமுதாயத்தினரும் கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த பண்டிகை தென்னிந்தியாவிலும் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் விதவிதமான ராக்கி விற்பனை கலைகட்டியுள்ளது.
இந்நிலையில், ரக்ஷா பந்தன் நிகழ்ச்சியை முன்னிட்டு வடக்கு ரயில்வே டெல்லி மண்டலம் பிரிவில் பெண்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்துள்ளது. அதற்கு "ரக்ஷா பந்தன் லேடிஸ் சிறப்பு ரயில்" என பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த ரயில்கள் டெல்லியில் இருந்து பல்வல், காஸியாபாத், பானிபட், போன்ற பகுதிகளுக்கு செல்லும் என கூறப்பட்டு உள்ளது.
On #RakshaBandhan, which is on Sunday, 26/8/2018, Delhi division has decided to run "Raksha Bandhan ladies special train" to facilitate convenient travel of ladies: Indian Railways pic.twitter.com/isrZHuY4Kh
— ANI (@ANI) August 23, 2018