மம்தாவுக்காக 14 ஆண்டு கால பதவியை விட்டுக்கொடுக்கும் காங்கிரஸ்

மாநிலங்களவை துணைத் தலைவரான பி.ஜெ.குரியன் பதவி காலம் இந்த மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடையுள்ளது. இதனை அதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 27, 2018, 03:16 PM IST
மம்தாவுக்காக 14 ஆண்டு கால பதவியை விட்டுக்கொடுக்கும் காங்கிரஸ் title=

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி காங்கிரஸ் வசம் உள்ளது. எனவே இம்முறை பாஜக தங்கள் வேட்பாளரை நிறுத்தி தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. ஆனால் மாநிலங்களவையில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. 245 எம்.பி-க்களை கொண்ட ராஜ்யசபாயில் பாஜகவுக்கு 69 எம்.பி-க்களும், காங்கிரஸூக்கு 51 எம்.பி-க்களும் உள்ளனர். எனவே பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாநில கட்சிகளின் ஆதரவு வேண்டும். இதனால் மாநில கட்சிகளின் ஆதரவு பெற்று பாஜகவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது. 

ஆனால் மூன்றாவது அணி சார்பாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுகேந்த் சேகர் ராய் வேட்பாளராக நிறுத்தப்பட உள்ளார். தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்குகள் பிரிந்தது, பாஜகவுக்கு சாதகமான நிலை ஏற்படலாம் என நினைத்த காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் தயார் என அறிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர் அணிகள் மம்தா பானர்ஜியின் தலைமையில் ஒன்று சேர உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News