ராஜஸ்தானில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று பாஜக ஆட்சியை வசப்படுத்தும் நிலையில், “இந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், பிரதமர் மோடியின் தலைமைக்கும், அமித் ஷாவின் வியூகத்துக்கும் கிடைத்த வெற்றி” என்று அம்மாநில பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக 115 தொகுதிகளை கைப்பற்றிள்ளது. அதேவேளையில், ஆளும் காங்கிரஸ் கட்சி 68 தொகுதிகளில் வென்றுள்ளது. இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது காங்கிரஸ். மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களுக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஸ்ரீகங்காநகரின் கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
மந்திரவாதியின் மயக்கத்தில் இருந்து ராஜஸ்தான் வெளிவந்துள்ளது: பா.ஜ.க
பாஜக முகாமில், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஜால்ராபட்டன் தொகுதியிலும், மற்ற பாஜக வேட்பாளர்கள் வித்யாத்நகரில் இருந்து தியா குமாரி, ஜோத்வாராவில் இருந்து ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பிந்த்வாரா அபுவிலிருந்து சமரம், மனோகர் தானாவிலிருந்து கோவிந்த் பிரசாத், பெஹ்ரூரில் இருந்து ஜஸ்வந்த் சிங் யாதவ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத், “மந்திரவாதியின்” மந்திரத்திலிருந்து மக்கள் வெளியே வந்துவிட்டதாகக் கூறி, கெஹ்லாட்டை கிண்டல் செய்தார். "மேஜிக்' முடிந்து ராஜஸ்தான் மந்திரவாதியின் மயக்கத்திலிருந்து வெளியே வந்துவிட்டது. பெண்கள் கவுரவத்திற்காகவும் ஏழைகளின் நலனுக்காகவும் மக்கள் வாக்களித்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க | பிரதமர் மோடியே வெற்றிக்கு காரணம்! காரணங்களை அடுக்கும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3 மாநிலங்களில் பாஜகவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் பாரதப் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வந்தனர்.
முடிவுகள் எதிர்பாராதவை: கெஹ்லாட்
சட்டசபை தேர்தல் முடிவுகள் "அனைவருக்கும் எதிர்பாராதது" என்று கூறிய அசோக் கெஹ்லாட், மக்கள் ஆணையை கட்சி தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டதாக கூறினார்.
பாஜக தொண்டர்களுக்கு 4 மாநில தேர்தல் முடிவுகளும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. பட்டாசுகளை வெடித்தும், லட்டு உள்ளிட்ட இனிப்புகளை கொடுத்தும் கொண்டாடி வருகின்றனர். ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் வெற்றியை எதிர்பார்த்தாலும் எதிர்பாராத ட்விஸ்ட் ஆக சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது பாஜக.
மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ