புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விரைந்து அழைத்துக்கொள்ளுங்கள் -மத்திய அரசு!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்காக தினம் 330 ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்!

Last Updated : May 10, 2020, 05:53 PM IST
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை விரைந்து அழைத்துக்கொள்ளுங்கள் -மத்திய அரசு! title=

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்திற்காக தினம் 330 ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்!

சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அணைவரும் அடுத்த மூன்று, நான்கு நாட்களில் சொந்த வீட்டிற்குச் செல்லக்கூடிய வகையில்  சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாகவும், மாநில அரசுகள் இந்த விஷயத்தில் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கேயல் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ரயில்களை இயக்க அனுமதிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதிய ஒரு நாள் கழித்து இந்த முறையீடு வந்துள்ளது.

"மாண்புமிகு பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் அறிவுறுத்தல்களின்படி, கடந்த ஆறு நாட்களில் இருந்து தினசரி 300 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை குறுகிய அறிவிப்பில் இயக்க ரயில்வே முழுமையாக உதவுகிறது.

"சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோரை வெளியேற்றவும், மீண்டும் அழைத்து வரவும் அனைத்து மாநிலங்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன், இதனால் அவர்கள் அனைவரையும் அடுத்த 3-4 நாட்களில் நாங்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல முடியும்" என்று கோயல் ஞாயிற்றுக்கிழமை ட்வீட் செய்துள்ளார்.

முன்னாதக சனிக்கிழமையன்று மேற்கு வங்க அரசாங்கம் தனது புலம்பெயர்ந்தோரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல எட்டு ரயில்களுக்கு அனுமதி வழங்கியதாகக் கூறியது. இந்த ரயில்களில் நான்கு, சனிக்கிழமை புறப்படவிருந்தன, ஆனால் தற்போது இந்த ரயில்களின் இயக்கம் தடைப்பட்டுள்ளது.
 
மத்திய அரசு ஒரு நாளைக்கு குறைந்தது 300 சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி அளித்துள்ள நிலையில், 5 நாட்களில் சுமார் 20 லட்சம் பேர் இந்த ரயில்கள் மூலம் பயணிக்கலாம் என தெரிகிறது. எனினும் மாநில அரசுகளின் மொனம் காரணமாக தொழிலாளர்களின் இயக்கம் முழுவதுமாக முடங்கியுள்ளது.

மே 10 ஆம் தேதி நிலவரப்படி, நாடு முழுவதும் மொத்தம் 366 "ஷ்ராமிக் ஸ்பெஷல்" ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன, அவற்றில் 287 ரயில்கள் தங்கள் இலக்குகளை எட்டியுள்ளன, 79 ரயில்கள் போக்குவரத்தில் உள்ளன. இந்த 287 ரயில்கள் ஆந்திரா (1 ரயில்), பீகார் (87), இமாச்சலப் பிரதேசம் (1), ஜார்க்கண்ட் (16), மத்தியப் பிரதேசம் (24), மகாராஷ்டிரா (3), ஒடிசா (20), ராஜஸ்தான் ( 4), தெலுங்கானா (2), உத்தரபிரதேசம் (127), மேற்கு வங்கம் (2) ஆகிய மாநிலங்களுக்கு இதுவரை தொழிலாளர்களை ஏற்றி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News