Puneet Rajkumar Death: இது பிரிந்துசெல்லும் வயதா? கலங்கும் ரசிகர்கள்!!

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நேற்று காலை 11.30 மணியளவில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படட் நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2021, 06:27 AM IST
Puneet Rajkumar Death: இது பிரிந்துசெல்லும் வயதா? கலங்கும் ரசிகர்கள்!!  title=

கன்னட திரை உலகின் பிரபலமான நடிகரும், மக்கள் அபிமானத்துக்கும் அன்புக்கும் பாத்திரமானவருமான கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நேற்று காலமானார். அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக வெள்ளிக்கிழமை அவர் உயிர் பிறிந்ததாக மருத்துவமனை ஆதாரங்கள் தெரிவித்தன.

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் நேற்று காலை 11.30 மணியளவில் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படட் நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

முன்னதாக மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட ஒரூ அறிக்கையில், " நெஞ்சு வலியால் அவதிப்படபுனீத் ராஜ்குமார் விக்ரம் மருத்துவமனையின் அவசர கசிகிச்சைப் பிரிவுக்கு காலை 11:40 மணியளவில் அழைத்து வரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு அவர் உடல் நிலை ஒத்துழைக்கவில்லை." என கூறப்பட்டது. 

கன்னட திரை உலகின் மிகப்பெரிய நடிகரான ராஜ்குமார் மற்றும் பர்வதம்மா ஆகியோரின் மகனான ராஜ்குமார் அவரது ரசிகர்களால் செல்லமாக 'அப்பு' என அழைக்கப்பட்டார்.

புனீத் ராஜ்குமாரின் அகால மரணம் அவரது ரசிகர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. தனது எளிமை மற்றும் அன்பால் பலரது உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டவர் புனீத். பலவித சமூக நலப்பணிகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட புனீத் ராஜ்குமார் ரசிகர்களிடம் மிகவும் சரளமாகவும் சகஜமாகவும் பழகியவர்.

தங்கள் அபிமான நடிகர் இப்படி திடீரென தங்களை விட்டுச்சென்றதை பல ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'இது பிரிந்து செல்லும் வயதா?' என்ற கேள்விதான் பலரது மனதில் உள்ளது. தன் உடலை பிட்டாக வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்ட புனீத்துக்கு இந்த வகையில் ஒரு அகால மரணம் வரும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். 

ALSO READ: கதறும் ரசிகர்கள்! கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார்

இதற்கிடையில், பெங்களூரு ஊடக அறிக்கைகளின் படி, நடிகர் புனீத் ராஜ்குமார் மரணத்திற்குப் பிறகு, பெங்களூரில் உள்ள பெரும்பாலான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டன. கன்னட திரையுலகின் முக்கிய பகுதியாக கருதப்படும் காந்திநகர பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மூடப்பட்டன.

மற்றொரு அறிக்கையின்படி, அவரது அதிர்ச்சியூட்டும் மரணத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 

புனீத் அவரது கண்களை தானம் செய்துள்ளார். அவருக்கு அஷ்வினி என்ற மனைவியும் வந்திதா, த்ருதி என இரு மகள்களும் உள்ளனர்.

ALSO READ: புனித் ராஜ்குமார் மறைவிற்கு அஜித் இரங்கல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News