முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்....
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளான இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Today we honour the Late Smt. Indira Gandhi, the first female Prime Minister of India & one of the strongest leaders our country has seen. Through her premiership, our nation saw great victory, incredible development & most importantly upliftment of all sections of society. pic.twitter.com/LwM3Se3305
— Congress (@INCIndia) October 31, 2018
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று நாடுமுழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர், முதல் பெண் பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகள். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக தனது பெயரை மாற்றிக்கொண்டா். பின்னர் தனது பெயரை சுருக்கமாக இந்திரா காந்தி மாற்றிக்கொண்டார். இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24, 1977 வரை பதவியில் இருந்தார்.
Remembering Dadi today with a deep sense of happiness. She taught me so much and gave me unending love. She gave so much of herself to her people. I am very proud of her.
— Rahul Gandhi (@RahulGandhi) October 31, 2018
On 31 st October 1984 34 years ago Indira Gandhi martyred herself on the alter of National Unity & integrity of India.The Iron Lady who changed the map of South Asia in 1971 was dignity, courage & grit personified. My salute to her on the day of her martyrdom #ShaheedIndiraGandhi
— Manish Tewari (@ManishTewari) October 31, 2018
பின்னர், 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.
Tributes to our former Prime Minister, Mrs. Indira Gandhi on her death anniversary.
— Narendra Modi (@narendramodi) October 31, 2018
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நமது முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியின் நினைவு தினமான இன்று அவருக்கு மரியாதை செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
“The power to question is the basis of all human progress”
Remembering the words of wisdom of India’s first and till date only female PM, the Iron Lady #IndiraGandhi ji on the anniversary of her demise. My tributes to her eternal soul.
— Sachin Pilot (@SachinPilot) October 31, 2018