பிரதமர் மோடி மூன்று நகரங்களில் 'உயர்-செயல்திறன்' ( 'high-throughput' கொண்ட கோவிட் -19 தானியங்கி பரிசோதனை அமைப்பை வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார்.
உயர்-செயல்திறன் COVID-19 பரிசோதனை அமைப்பில் ஒரு நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதிக்க முடியும்.
பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஜூலை 27) நொய்டா, மும்பை மற்றும் கொல்கத்தாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கான உயர் செயல் திறன் கொண்ட தானியங்கி பரிசோதனை அமைப்புகளை வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடக்கி வைக்கிறார்.
ALSO READ | Unlock 3: பள்ளிகள், கல்லூரிகள், ஜிம், தியேட்டர்கள் நிலை என்ன..!!!
உயர் செயல்திறன் பரொசோதனை நிலயங்கள் மூலம் நாட்டின் பரிசோதனைத் திறனை அதிகரிப்பதோடு, வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராட உதவும். கொரோனா வைரஸை விரைவாகக் கண்டறிந்து சிகிச்சையளிக்கலாம் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
ALSO READ | Work From Home: அதிர்ச்சிகரமான உடல் மற்றும் மன நல பாதிப்புகள் என்ன...!!!
ஜூலை 27 திங்கள் மாலை 4:30 மணிக்கு, உயர்-செயல்திறன் கொண்ட COVID-19 பரிசோதனை மையங்கள் தொடங்கப்படும். நொய்டா, மும்பை மற்றும் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த உயர்-செயல்திறன் அமைப்புகள், நமது பரிசோதனை திறனை மேலும் அதிகரிக்க உதவும் என பிரதமர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
At 4:30 PM on Monday, 27th July, high-throughput COVID-19 testing facilities will be launched.
These high-throughput testing facilities being set up in Noida, Mumbai and Kolkata will help in further ramping up our testing capacity. https://t.co/nvxM0MToua
— Narendra Modi (@narendramodi) July 26, 2020
ICMR-தேசிய புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நொய்டா, ICMR-தேசிய பேறுகால சுகாதார ஆராய்ச்சி நிறுவனம், மும்பை மற்றும் ICMR-தேசிய காலரா மற்றும் குடல் சார்ந்த நோய்களுக்கான மையம், கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் உயர்-செயல்திறன் பரிசோதனை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயர் செயல்திறன் கொண்ட இந்த பரிசோதனை அமைப்பில் ஒரு நாளில் 10,000 க்கும் மேற்பட்ட மாதிரிகளை பரிசோதிக்க முடியும்.
இந்த திறப்பு விழாவில், மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 13,85,522 ஆக இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.