தூய்மையான கங்கை தான் எங்கள் மிஷன்; நதியை ஆய்வு செய்த பிரதமர் மோடி

கங்கை நதியின் தூய்மைப்படுத்துதைக் குறித்து மோட்டார் படகு வழியாக ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2019, 04:20 PM IST
தூய்மையான கங்கை தான் எங்கள் மிஷன்; நதியை ஆய்வு செய்த பிரதமர் மோடி title=

கான்பூர்: "நமாமி கங்கே திட்டத்தை" (Namami Gange Project) மறுஆய்வு செய்வதற்கும், தேசிய புனித கங்கை நதியை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கும் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi)  கான்பூர் (Kanpur) சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து சந்திரசேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தேசிய கங்கா கவுன்சிலின் (National Ganga Council) கூட்டத்தில் கலந்துக் கொண்டார். இந்த கூட்டம் தேசிய கங்கை நதியின் புத்துணர்ச்சி, பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்து ஆலோசனை செய்ய நடைபெற்றது. பின்னர் கான்பூரில் உள்ள அடல் காட்டில் இருந்து மோட்டார் படகு வழியாக கங்கை நதியை ஆய்வு செய்தார். 

இந்த கூட்டத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் (CM Yogi Adityanath), மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் (CM Trivendra Singh Rawat), பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி (Sushil Modi)  ஆகியோர் கலந்து கொண்டனர். இங்கே பிரதமர் நரேந்திர மோடி முதலில் நமாமி கங்கே மிஷன் வழங்கலைக் கண்டார்.

 

பிரதமர் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை) காலை 10:30 மணியளவில் கான்பூரை அடைந்தார் என்பதை உங்களுக்கு சொல்லுகிறோம். முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியை வரவேற்றார். இதன் பின்னர் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் சிஎஸ்ஏ கல்லூரியை அடைந்தார். மேலும் சந்திர சேகர் ஆசாத்தின் சிலைக்கு மாலை அணிந்த பின்னர், முதல்வர் யோகியுடன் கால்நடையாக சந்திப்பு அறைக்குச் சென்றார்.

 

Trending News