மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இப்போது பொய்களை பரப்புகிறார்கள்: பிரதமர் மோடி

மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இப்போது பொய்களையும் மாயைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்று மறைமுகமாக எதிர்கட்சிகளை தாக்கிய பிரதமர் மோடி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 20, 2020, 06:20 PM IST
மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இப்போது பொய்களை பரப்புகிறார்கள்: பிரதமர் மோடி title=

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை வரவேற்க கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றியபோது, எதிர்க்கட்சிகளை கடுமையாக கண்டித்து பேசினார். பொதுமக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் இப்போது பொய்களையும் மாயைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்று அவர் கூறினார். CAA பற்றி நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களை சுட்டிக்காட்டிய பிரதமர், "நிராகரிக்கப்பட்ட சிலர் மாயைகளை பரப்புகிறார்கள். ஆனால் அவர்களால் மக்களின் நம்பிக்கை அசைக்கப்படவில்லை. அவர்களின் பொய்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும், அதேநேரத்தில் நாங்கள் தொடர்ந்து முன்னோக்கி சென்றுக்கொண்டே இருப்போம்" எனக் கூறினார்.

எதிர்க்கட்சி மீது தாக்குதல்:
பிரதமர் மோடி கூறுகையில், "தேர்தல் அரசியலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், இப்போது அவர்களிடம் மிகக் குறைவான ஆயுதங்கள் மட்டுமே உள்ளன. பொய்களைப் பரப்புதல், பொய்களை மீண்டும் மீண்டும் பரப்புதல் ஆகியவை இதில் அடங்கும். இதை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். 

மக்கள் தான் எங்கள் பலம். மக்கள் சக்தி தான் காங்கிரஸ் அல்லாத கட்சிக்கு முதன்முறையாக ஒரு முழுமையான பெரும்பான்மையைக் கொடுத்தது, அதைவிட வலுவான பெரும்பான்மையை கொடுத்து மீண்டும் தேர்வு செய்தது.

அமித் ஷாவை பாராட்டிய பிரதமர் மோடி:
பாஜக முன்னாள் தலைவர் அமித் ஷாவை பாராட்டிய பிரதமர் மோடி, கட்சிக்கு அதிக பலத்தை அளித்ததாக தெரிவித்தார். ஒரு அரசியல் கட்சி ஆட்சியில் இருக்கும்போது போராடுவது மிகவும் கடினம், ஆனால் பாஜக ஆட்சியில் இருக்கும்போது, அமித் ஷா கட்சியை விரிவுபடுத்தியுள்ளார், இது ஒரு பெரிய விஷயம் என்றார்.

அதேபோல புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவை புகழ்ந்து பேசினார். பிரதமர் கூறுகையில், இமாச்சல் மாநிலத்தை விட பீகார் மக்கள் மீது நட்டாவுக்கு அதிக உரிமை உண்டு. "இமாச்சல் பிரதேசத்தின் மகன்களில் ஒருவர் இன்று பாஜகவின் தலைவராகி விட்டார் என்று இமாச்சல் பிரதேச மக்கள் நினைக்கலாம், ஆனால் இமாச்சல் மாநிலத்தில் நட்டா ஜிக்கு உரிமை பீகார் போன்றது. நட்டா ஜி பீகாரில் இருந்து கல்வி கற்றார். பீகார் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்ளும் என்று பேசினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News