பாரத பிரதமர் நரேந்திர மோடி, வரும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாட்களில் வீடியோ கான்ப்ரஸிங் மூலம் இரண்டு முக்கிய மாநாடுகளில் பங்கேற்று உறையாற்றுகிறார்!
டிசம்பர் 31-ஆம் தேதி, கேரளாவில் வர்கலாவிலுள்ள சிவகிரி மடத்தில் நடைப்பெறவுள்ள 85-வது சிவகிரி பக்தர்கள் கொண்டாட்டத்தில் தொடக்க உறை வழங்குகிறார். "சிவகிரி மடம்" இந்தியாவின் பெரிய ஞானிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளில் ஒருவரான ஸ்ரீ நாராயண குரு-வின் நினைவிடமாக கருதப்படுகிறது!
பின்னர், 2018-ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாள், கொல்கத்தாவில் நடைப்பெறவுள்ள பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸ் அவர்களின் 125-வது பிறந்த நாள் விழாவில் வீடியோ கான்ப்ரஸிங் மூலம் உரையாற்றுகிறார்.
பேராசிரியர் சத்யேந்திரநாத் போஸ் இந்திய இயற்பியலாளராக இருந்தார், குவாண்டம் இயக்கவியல் குறித்த அவரது பணிக்காக நன்கு அறியப்பட்டவர், போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளிவிவரங்களுக்கு அடித்தளம் அளித்தவர்.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி வீடியோ காண்ப்ரஸிங் மூலம் உரையாற்றுகிறார் என அரசு செய்திகுறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது!