அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது

முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி விதி ரத்து செய்யப்பட்டது.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 23, 2019, 10:04 AM IST
அதிகாலை 5.47 மணிக்கு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டது title=

புதுடில்லி: பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் ஜனாதிபதி விதி ரத்து செய்யப்பட்டது. கடந்த மாத தேர்தல்கள் முடிவுகளுக்கு பிறகு மாநிலத்தில் அட்சி அமைக்க யாரும் பெரும்பான்மையை நிருப்பிக்க முடியாத படசத்தில், நவம்பர் 12 அன்று மாநிலம் ஜனாதிபதி ஆட்சி அமல் செய்யப்பட்டது. இதன் பின்னர், இன்று காலை மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா வெளியிட்ட சுருக்கமான மூன்று வரி அறிவிப்பில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், "மகாராஷ்டிரா மாநிலம் தொடர்பாக, 2019 நவம்பர் 23 ஆம் தேதி முதல் நடைமுறைகக்கு வந்த ஜனாதிபதி ஆட்சியை ராம்நாத் கோவிந்த ரத்து செய்தார் எனக் கூறப்பட்டு உள்ளது.

சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி இடையேயான நீண்ட முத்தரப்பு சந்திப்புக்குப் பின்னர் சனிக்கிழமை இரவு மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகின. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூட்டணியின் முதல்வராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

"உத்தவ் தாக்கரே முதலமைச்சர் என்ற கொள்கையில் நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்து வைத்திருக்கிறோம்," என்று கூட்டத்தில் இருந்து வெளிவந்த பின்னர் என்சிபி தலைவர் சரத் பவார் கூறினார்.

ஆனால், வியத்தகு விசியம் என்னவென்றால், ஒரே இரவில் திடிரென பாஜக, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் (NCP) ஒரு கூட்டணியை உருவாக்கியது. தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார், ஷரத் பவாரின் மருமகன் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

முதல்வராக பதவியேற்ற பின்னர், தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிரா மக்கள் தெளிவான ஆணையை வழங்கியதாக கூறினார். மகாராஷ்டிராவில் நிரந்தர அரசாங்கம் தேவை. இதற்காக, நாங்கள் என்.சி.பியுடன் ஒரு அரசாங்கத்தை அமைத்துள்ளோம். சிவசேனா கட்சியால் தான் மாநிலதில் ஜனாதிபதி ஆட்சியில் வந்தது. சிவசேனா மக்கள் ஆணையை பின்பற்றவில்லை. மாநிலத்தில் கடந்த சில நாட்களாக ஜனாதிபதியின் ஆட்சி இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம் மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவாக வந்த என்.சி.பி.க்கு நான் நன்றி கூறுகிறேன். என்று அவர் கூறினார்.

அதே நேரத்தில், துணை முதல்வரான என்.சி.பியின் அஜித் பவார் பேசுகையில், "தேர்தல் முடிவுகள் வந்த நாள் முதல் இன்றுவரை எந்த கட்சியும் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை என்று கூறினார். மகாராஷ்டிரா உழவர் பிரச்சினைகள் உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டது, எனவே நாங்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடிவு செய்தோம். அதனால் பாஜகவுடன் சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைத்துள்ளோம் எனக் கூறினார்

கடந்த மாதம் மாநிலத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெற்று ஒற்றை கட்சியாக உருவெடுத்த பாஜக, தனது முன்னாள் கூட்டாளியான சிவசேனாவுடன் தனது "50:50" கோரிக்கையின் பேரில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சி தோல்வியில் முடிந்தது. 

அக்டோபர் 24 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, இன்றுடன் 19 நாட்களுகள் ஆகியும், மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியும் இதுவரை தேவையான பெரும்பான்மையை ஆளுநரிடம் முன்வைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவின் 288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் பாஜகவுக்கு 105, சிவசேனா 56, என்சிபி 54, காங்கிரஸ் 44 இடங்கள் கிடைத்தன. 

Trending News