ஆறு மாநில ஆளுநர்கள் அதிரடி மாற்றம்; பின்னணி என்ன?

பீகார், மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்குவங்க ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு அதிரடி உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது!

Last Updated : Jul 20, 2019, 01:57 PM IST
ஆறு மாநில ஆளுநர்கள் அதிரடி மாற்றம்; பின்னணி என்ன? title=

பீகார், மத்திய பிரதேஷ், உத்திர பிரதேஷ், திரிபுரா, நாகாலாந்து மற்றும் மேற்குவங்க ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டு அதிரடி உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது!

மத்திய பிரதேச ஆளுநராக இருந்த ஆனந்திபென் பட்டேல், உத்திர பிரதேச மாநிலத்திற்கு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெயதீப் தன்கர் மற்றும் திரிபுரா ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் ஆளுநராக இருந்த லால் ஜி டன்டன், மத்திய பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பீகார் ஆளுநராக பகு சவுகனும், நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவியும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்த புதிய நியமனங்கள், அந்தந்த மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் பதவியேற்கும் நாள் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 15-ஆம் நாள் அன்று குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஆளுநர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் ஆளுநராக முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ராவும், குஜராத் ஆளுநராக ஆச்சார்யா தேவ் விராட்டும் நியமனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News