இரண்டுநாள் பயணமாக தமிழகம் வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

இரண்டுநாள் பயணமாக 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.

Last Updated : May 2, 2018, 10:27 AM IST
இரண்டுநாள் பயணமாக தமிழகம் வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!  title=

சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழா வருகிற 5-ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தமிழகத்திற்கு 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறார். 

சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார். 

இவரது பயணத்தின் விவரம்...! 

4-ம் தேதி:- டெல்லியில் காலை 8.05 மணிக்கு ராணுவ தனி விமானத்தில் புறப்பட்டு 10.45-க்கு சென்னை வந்தடையும் குடியரசு தலைவரை, விமான நிலையத்தில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், முப்படை அதிகாரிகள் வரவேற்கின்றனர்.

11 மணிக்கு ஹெலிகாப்டரில் வேலுார் புறப்படுகிறார். 11.45-க்கு வேலுார் செல்கிறார். 2.30 மணிக்கு சி.எம்.சி. மருத்துவ கல்லுாரி நுாற்றாண்டு கொண்டாட்ட தொடக்க விழாவில் பங்கேற்கிறார்.

இதயைடுத்து 3 மணிக்கு ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கிட்னி மாற்று மற்றும் ஆராயச்சி மையத் திறப்பு விழாவில் பங்கேற்கிறார். மாலை 4 மணிக்கு ஸ்ரீ லட்சுமி நாராயணி தங்க கோயிலுக்கு செல்கிறார். பின்னர் ராணுவ ஹெலிகாப்டரில் சென்னை புறப்படும் குடியரசு தலைவர், 6.05-க்கு ராஜ்பவன் வந்து சேர்கிறார். 7.30 மணிக்கு முக்கிய பிரமுகர்களை சந்திக்கிறார்.

5-ம் தேதி:- காலை 9.30 மணிக்கு முக்கிய பிரமுகர்களுடன் சந்திப்பு. 10.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக 160-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பு. 12-க்கு வேளச்சேரி குருநானக் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். மதியம் 1.25 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்படுகிறார்.

Trending News