உபியின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள யோகி ஆதித்யநாத் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கைது செய்ய சிறப்பு போலீஸ் படையை உருவாக்கி உள்ளார். இதற்கு ‘ரோமியோ எதிர்ப்பு படை’ எனவும் பெயரிடப்பட்டார். இந்த நடவடிக்கையை, ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்டவரும், பிரபல வக்கீலுமான பிரசாந்த் பூஷண் தனது டிவிட்டர் தளத்தில் விமர்சித்திருந்தார்.
ரோமியோ ஒரு பெண்ணை மட்டுமே காதலித்தார். ஆனால் கிருஷ்ண பகவான் புகழ்பெற்ற ஈவ் டீசர். அப்படியிருக்க யோகி ஆதித்யநாத்தின் சிறப்பு படையினரை கிருஷ்ணா எதிர்ப்பு படை என அழைக்க அவருக்கு தைரியம் இருக்கிறதா என்று விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, தனது கருத்து திரித்து பொருள் கொள்ளப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
பல்வேறு தரப்பில் இருந்து பிரசாந்த் பூஷண் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சர்ச்சைக்குரிய கருத்தை பிரசாந்த் பூஷண் தன்னுடைய டிவிட்டரில் இருந்து நீக்கிவிட்டார்.
ரோமியோ படைகள் மற்றும் கிருஷ்ணா குறித்தான என்னுடைய டிவிட் பொருத்தமற்றது என உணர்ந்துவிட்டேன், தற்செயலாக மக்களின் உணர்வை புண்படுத்திவிட்டது. அதற்கு மன்னிப்பு கேட்கின்றேன், டிவிட்டை நீக்கிவிட்டேன் என பிரசாந்த் பூஷண் கூறியுள்ளார்.
I realise that my tweet on Romeo squads&Krishna was inappropriately phrased&unintentionally hurt sentiments of many ppl. Apologize&delete it
— Prashant Bhushan (@pbhushan1) April 4, 2017