பஞ்சாப் நேஷ்னல் வங்கி ரூ.11,400 கோடி ஊழல் வழக்கு தொடர்பாக, நீரவ் மோடிக்கு வங்கி கிளையில் இருந்தே உத்தரவாகம் தரப்பட்டதால் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு வருமான வரி துறை சீல் வைத்தது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடி சர்வதேச வங்கிக் கிளைகளில் கடனீட்டு பத்திரங்களின் மூலம் ரூ 11,400 கோடி கடன் பெற்றுவிட்டு ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் நீரவ் மோடி தலைமறைவாகி வெளிநாட்டுக்கு தப்பிசென்று விட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின்பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.11, 400 கோடி மோசடி செய்த நீரவ் மோடிக்கு வங்கி கிளையில் இருந்தே உத்தரவாதம் வழங்கப்பட்டது.
CBI sealed Punjab National Banks's MCB Brady House branch in Mumbai, from where transactions related to #PNBScam were carried out. #NiravModi pic.twitter.com/TChoIYlGW9
— ANI (@ANI) February 19, 2018
இதையடுத்து மும்பை எம்சிபி பிரேசி ஹவுஸ் பகுதியில் உள்ள அந்த வங்கிக் கிளைக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.