பாஜக தொண்டர்களிடையே மோடி வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்...

பாஜக-வின் 40-வது அறக்கட்டளை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஏப்ரல் 6) பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுடன் உரையாற்றினார். இதன் போது தொண்டர்களிடையே 5 முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். 

Last Updated : Apr 6, 2020, 03:00 PM IST
பாஜக தொண்டர்களிடையே மோடி வைத்த 5 முக்கிய கோரிக்கைகள்... title=

பாஜக-வின் 40-வது அறக்கட்டளை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஏப்ரல் 6) பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுடன் உரையாற்றினார். இதன் போது தொண்டர்களிடையே 5 முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். 

பிரதமர் மோடி தனது உரையின் போது, இது தொற்றுநோய்க்கு எதிரான ஒரு நீண்ட போராக இருக்கும், குடிமக்கள் சோர்வடையவோ அல்லது கைவிடவோ கூடாது என்று கேட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான ஒரு நீண்ட யுத்தம் என்று நான் முழு பொறுப்போடு கூறுகிறேன். ஆனால் இந்த போரில் நாம் சோர்வடையவோ ஓய்வெடுக்கவோ தேவையில்லை. நாம் வெற்றிகரமாக இந்த துயரத்தில் இருந்து வெளிவர வேண்டும். இன்று, நாட்டின் ஒரே ஒரு குறிக்கோள், ஒரே ஒரு தீர்மானம் எல்லம் இந்த போரில் வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே" எனவும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே பிரதமர் மோடி தனது கட்சி தொண்டர்களிடன் 5 முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்தார். அதே நேரத்தில் நெருக்கடியின் போது எந்த ஏழைகளும் பசியுடன் இருப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மோடியின் 5 கோரிக்கைகள்...

  • ஒவ்வொரு கட்சி ஊழியருக்கும் முடிந்தவரை ஏழைகளுக்கு உணவு மற்றும் மளிகை பொருட்களை விநியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், அது தொடர்ச்சியான சேவையாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேம்.
  • 5 துணி முகமூடிகளை உருவாக்கி மற்றவர்களுக்கு விநியோகிக்கவும். மேலும், நீங்கள் ஒருவருக்கு உதவ வெளியே செல்லும்போது முகத்தை மறைக்க முகமூடி அல்லது ஏதாவது துணியை பயன்படுத்துங்கள்.
  • மருத்துவர்கள்-செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், காவல்துறையினர், வங்கி அஞ்சல் அலுவலக ஊழியர்கள், பிற அரசு ஊழியர்கள் அடங்கிய நாட்டின் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்., ஐந்து வெவ்வேறு பிரிவு தொழிலாளர்களுக்கு பாராட்டு கடிதம் எழுத வேண்டும்.
  • கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் உதவ ஒரு 'Arogya Setu செயலி' உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சி ஊழியரும் இந்த பயன்பாட்டைப் பற்றி அதிகபட்ச நபர்களுக்குத் தெரிவிக்க வேண்டும், மேலும் இந்த பயன்பாட்டை குறைந்தது 40 பேரின் மொபைல் போன்களில் நிறுவ வேண்டும்.
  • PM-CARES நிதிக்கு மில்லியன் கணக்கான மக்கள் நன்கொடை அளிக்கின்றனர். ஒவ்வொரு பாஜக ஊழியரும் இந்த நிதிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் குறைந்தது 40 பேரை ஒத்துழைக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அனைவருக்கும் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், சமூக தொலைதூர மந்திரத்தை பின்பற்றுவதன் மூலம் பாதுகாப்பாக இருக்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். 

Trending News