டெல்லி: குறைந்த கட்டணத்தில் நாட்டின் சிறிய நகரங்களை இணைக்கும் விமான சேவை வழங்கும் "உதான் திட்டம்" பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. உதான் திட்டத்தின் சாதகமான முடிவுகளை தெரிய தொடங்கி விட்டது என பிரதமர் கூறியுள்ளார்.
"உதான் திட்டம்" மூலம் பிரகதி குமார் என்ற நபர், தனது ட்வீட்டர் பக்கத்தில் பாட்டியின் படத்தைப் பகிர்ந்துகொண்டு, அதில் பறக்கும் திட்டத்தின் (உடான் திட்டம்) காரணமாக பாட்னாவிலிருந்து அலகாபாத்திற்கு பயணிக்க முடிந்தது. எனது 90 வயது பாட்டி முதல் முறையாக விமானத்தில் விஜயம் செய்தார். அவர் விமானத்தில் உட்கார்ந்து இருந்த பாட்டியை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விமானங்களில் பறக்கும் கனவு இறுதியாக நிறைவேறியது. "உதான் திட்டம்" ஒரு பெரிய முயற்சியாகும். இந்த திட்டத்தின் மூலம் பல கனவுகள் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு ட்வீட் செய்ததுள்ளார் பிரகாத்தி குமார்.
Wonderful to see this!
Thank you for the kind words on Udan.
We are determined to improve connectivity and make the aviation sector more passenger friendly as well as affordable. https://t.co/miOpzuVvDT
— Narendra Modi (@narendramodi) August 27, 2018
அவரது ட்வீட்-க்கு பதிலளித்த பிரதமர் மோடி, கூறியதாவது, "இது பார்க்க அற்புதக் காட்சியாகும்! விமானம் பற்றிய பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றி". "இணைப்புகளை மேம்படுத்துவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். மேலும் விமானப் போக்குவரத்துத் துறை பயணிகளுக்கு மிகவும் சாதகமானதாகவும், விலை குறைந்ததாகவும் இருக்க அனைத்து நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும் என கூறியுள்ளார்.