மும்பை பேரழிவு; இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு

மும்பையின் செம்பூர்  பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவு காரணமாக சேரிகளில் பெரிய சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 17  பேர் உயிரிழந்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 18, 2021, 02:39 PM IST
  • மும்பையின் செம்பூர் பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவு காரணமாக சேரிகளில் பெரிய சுவர் இடிந்து விழுந்துள்ளது.
  • இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை பேரழிவு; இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ₹5 லட்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு title=

மும்பை: பலத்த மழை காரணமாக மும்பையில் (Mumbai) பேரழிவு ஏற்பட்டுள்ளது.  கனமழை காரணமாக, செம்பூர் மற்றும்  2 இடங்களில்  நிலச்சரிவு ஏற்பட்டு, குடிசைகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மும்பையின் செம்பூர்  பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவு காரணமாக சேரிகளில் பெரிய சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இந்த விபத்தில் 17  பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். தீயணைப்பு படையினர், 13 பேர்களை மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை இன்னும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மும்பையின் (Mumbai) விக்ரோலி மற்றும் செம்பூர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் இறந்தவரின் உறவினர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் (PMO) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 18, 2021) அறிவித்தது. மேலும்,  காயமடைந்தவர்களுக்கு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்தில் இருந்து (PMNRF) ரூ .50,000 நிதி உதவி வழங்கப்படும் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

"மும்பையில் சுவர் இடிந்து விழுந்ததால் உயிர் இழந்தவர்களின் உறவினர்களுக்கு PMNRF-ல் இருந்து தலா ரூ .2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ .50,000 வழங்கப்படும்" என்று பிரதமர் அலுவகம்  ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி (PM Modi) மும்பையில் கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களால் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்து ஆழ்ந்த மன வருத்தம் அடைந்துள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார்.

செம்பூரில், தேசிய பேரிடர் நடவடிக்கை படையின் (NDRF) குழு பாரத் நகர் பகுதிக்கு சென்று,  அங்கு  குடிசைகள் இடிபாடுகளில்  இருந்து, மக்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்து  ஏடுபட்டு வருகிறது.

மும்பையில் கடந்த ஜூன் 9-ந் தேதி மழைக்காலம் தொடங்கியது. இதில் பருவ மழை தொடங்கிய முதல் நாளே பலத்த மழையால் மும்பை நகரமே வெள்ளக்காடானது. அதன்பிறகு சில நாட்களுக்கு மழை நீடித்தது. 

ALSO READ | Alcatraz Prison: உலகின் பயங்கரமான, மர்மமான சிறைச்சாலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News