லக்னோ: மோசமான வானிலை காரணமாக, பிரதமர் மோடி விமானத்தில் இருந்தபடியே தொலைபேசி மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரெய்ச்சில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் பஹ்ரெய்ச்சில் மோசமான வானிலை நிலவியது. இதனால் மோடியின் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து பிரதமர் மோடி, விமானத்தில் இருந்தபடியே தொலைபேசி மூலம் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
பிரதமரின் வருகைக்காக பஹ்ராய்ச்சில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
PM Modi's helicopter unable to land in Bahraich due to foggy weather: Keshav Prasad Maurya pic.twitter.com/od7xwQJWod
— ANI UP (@ANINewsUP) December 11, 2016
ஆனால், மோசமான வானிலை காரணமாக லக்னோ நகருக்கு திரும்பிச் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து கைபேசி மூலம் பஹ்ராய்ச் பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். பிரசார பொதுக்கூட்ட மேடையில் உள்ள மைக்கின் வழியாக அவரது பேச்சு ஒலிபரப்பப்படுகிறது.