நாடாளுமன்றத்திற்கு வராத எம்.பி.க்கள் விவரம் வேண்டு: பிரதமர் மோடி அதிரடி

நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்களின் பட்டியலை இன்று மாலைக்குள் எனக்கு அனுப்பி வையுங்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2019, 12:47 PM IST
நாடாளுமன்றத்திற்கு வராத எம்.பி.க்கள் விவரம் வேண்டு: பிரதமர் மோடி அதிரடி title=

புதுடெல்லி: பாஜக நாடாளுமன்றக் கூட்டத்தில், மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தனது கடுமையான நிலைப்பாடு தெரிவித்துள்ளார். இன்று, பிரதமர் மோடி  நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்களின் பட்டியலை கேட்டுள்ளார். மாலைக்குள் பட்டியலை அனுப்பி வையுங்கள் என்றும் கூறியுள்ளார். பிரதமர் மோடி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷியிடம் இதனை தெரிவித்தார். நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் அமர்வு நடைபெறும் போது, ​​இரு அவைகளிலும் கலந்துக்கொண்ட அமைச்சர்களின் பட்டியல் இருக்கும். அதாவது, ஒவ்வொரு அமைச்சரும் இரு அவைகளிலும் எத்தனை முறை ஆஜரானார்கள் என்ற தகவல்கள் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு நாடாளுமன்ற அமைச்சர் சார்பாக வழங்கப்படுகின்றன.

நாடாளுமன்றத்திற்கு வரத்தவறிய பல அமைச்சர்கள் பட்டியலை பிரதமர் மோடி கேட்டுள்ளார். இன்று நாடாளுமன்றக் இதுல் குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். 

Trending News