நாட்டின் நீளமான சுரங்கப்பாதையை மோடி துவக்கி வைத்தார்

Last Updated : Apr 2, 2017, 05:14 PM IST
நாட்டின் நீளமான சுரங்கப்பாதையை மோடி துவக்கி வைத்தார் title=

காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

 

 

 

 

ஜம்முவையும் காஷ்மீரையும் இணைக்கும் வகையில் செனானி மற்றும் நஷ்ரி இடையே மலைப்பகுதியில் 9.2 கி.மீ. தூரத்துக்கு சுரங்கம் அமைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுதான் நாட்டிலேயே மிக நீளமான சுரங்கப்பாதை ஆகும். 

இந்த சுரங்கப்பாதையால் வாகன ஓட்டிகளுக்கு 2 மணி நேரம் மிச்சமாகும். ஆண்டுக்கு ரூ.99 கோடி மதிப்பிலான எரிபொருளும் சேமிக்கப்படும். ரூ.3,700 கோடி செலவில், பல தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து அந்த பாதையில் பிரதமர் பயணித்தார். விழாவில் காஷ்மீர் கவர்னர், முதல்வர் முப்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பிரதமரின் வருகையையொட்டி ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தன. 

Trending News