CAA போராட்டங்கள் குறித்து பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர்!

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்கள் குழுவை சனிக்கிழமை சந்தித்தார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Last Updated : Dec 21, 2019, 08:15 PM IST
CAA போராட்டங்கள் குறித்து பாதுகாப்பு பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர்! title=

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான வன்முறை போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சர்கள் குழுவை சனிக்கிழமை சந்தித்தார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 11-ஆம் தேதி நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றியதில் இருந்து காவல்துறையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இது இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

மோடியின் அரசாங்கம் 2014-ல் முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவருக்கு எதிரான வலுவான எதிர்ப்பு இது என கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டங்களை நிறுத்துவதற்கு ஊரடங்கு உத்தரவு மற்றும் விதிமுறைகள் இருந்தபோதிலும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.

குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் உள்ள உரிமை ஆர்வலர்கள், புதிய ஆர்ப்பாட்டங்களைத் திட்டமிடுவதைத் தடுக்க காவல்துறையினர் தங்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் சோதனை செய்தனர். சனிக்கிழமையன்று புதிய போராட்டங்கள் வெடித்ததால் அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பள்ளிகளையும் மூடினர்.

தலைநகரான டெல்லியில், தடுத்து வைக்கப்பட்டுள்ள டஜன் கணக்கான எதிர்ப்பாளர்களை விடுவிக்கக் கோரி குடும்ப உறுப்பினர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்தனர்.

வடகிழக்கு மாநிலமான அசாம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் அதிகமான ஆர்ப்பாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிரான மனக்கசப்பு பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது, அங்கு அத்துமீறி நுழைந்த வெளிநாட்டவர்கள் (இந்துக்கள் அல்லது முஸ்லிம்கள்) தங்கள் நிலங்களை திருடியதாக குற்றம் சாட்டப்படுகிறார்கள். இந்நிலையில் அசாமில் போராட்டங்கள் உச்ச கட்டத்தை எட்டி வருகிறது.

இதுகுறித்து அனைத்து அசாம் மாணவர் சங்கத்தின் தலைவரான சம்முஜல் பட்டாச்சார்யா தெரிவிக்கையில்., "அசாம் முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தச் சட்டத்திற்கு எதிரான முன்னேற்றம் நாளுக்கு நாள் வேகத்தை அதிகரித்து வருகிறது,” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பிற பகுதிகளில், சட்டத்தின் மீதான கோபம் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாடாகக் கருதப்படுவதிலிருந்து உருவாகியுள்ளது. மேலும் மதச்சார்பற்ற அரசியலமைப்பில் பெருமை பெற்ற ஒரு நாட்டில் குடியுரிமைக்கான ஒரு அளவுகோலாக மதத்தை குறித்திருப்பது போராட்டங்களுக்கான மூல காரணமாக அமைந்துள்ளது.

"பலவிதமான வாழ்க்கைத் துறையைச் சேர்ந்த பலர் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர். தெற்கு மாநிலமான பெங்களூரில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக காவலில் வைக்கப்பட்ட பின்னர் குஹா போலீஸ் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பிராந்தியக் கட்சிகளைச் சேர்ந்த மாநிலத் தலைவர்கள் தங்கள் மாநிலங்களில் இந்த சட்டத்தை செயல்படுத்துவதைத் தடுப்பதாக சபதம் எடுத்துள்ளனர். எனினும் இந்த சட்டத்தை ரத்து செய்ய வாய்ப்பில்லை என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது. இதனிடையே வலுக்கும் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஆலோசனை நடத்தி வருகிறது.

Trending News