ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாளாக அனுசரிக்கப்படும்: பிரதமர் மோடி

சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2021, 12:37 PM IST
  • ஆகஸ்ட் 14 -ம் தேதி பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ என கடைபிடிக்கப்படும்
  • ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர், 'பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது' என்று கூறினார்.
ஆகஸ்ட் 14 பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாளாக அனுசரிக்கப்படும்: பிரதமர் மோடி title=

புதுடெல்லி: ஆகஸ்ட் 14 -ம் தேதி '‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் தினமாக' அனுசரிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அறிவித்தார். ட்விட்டரில் இது குறித்து பதிவிட்ட பிரதமர் மோடி (PM Narendra Modi), 'பிரிவினையின் வலிகளை ஒருபோதும் மறக்க முடியாது' என்று கூறினார்.

தனது ட்விட்டர் பதிவில் "லட்சக்கணக்கான நமது சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் புலம் பெயரவும், அகதிகளாகவும், அனாதைகளாகவும் ஆக காரணமான பிரிவினை வன்முறையில், பலர்  உயிர்களையும் இழந்தனர். நம் நாட்டு மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14 ஆம் தேதி பகிர்வு திகில் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்."

சமூக வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமையின்மை என்ற விஷத்தை அகற்ற வேண்டியதன் அவசியத்தை ‘பிரிவினை கொடுமைகளை நினைவுகூறும் நாள்’ நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கும் என்று பிரதமர் மோடி (PM Modi) கூறினார்

இந்திய வரலாற்றில் இருண்ட காலங்களில் ஒன்றாக 1947 ஆண்டின் பிரிவினை சகாப்தம்  கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரிவினை ஆயிரக்கணக்கான இந்துக்களையும் முஸ்லிம்களையும்  புலம் பெயரச்செய்தது,  பிரிவினை, மதக் கலவரங்களோடு கொலை, கற்பழிப்பு, கொள்ளை மற்றும் பிற பயங்கரமான நினைவுகளை உள்ளடக்கியதாக உள்ளது.

பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு பாகிஸ்தானின் சுதந்திர தினமான இன்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை  நாளை கொண்டாட உள்ளது.

ALSO READ | August 15: இந்தியாவை தவிர சுதந்திர தினத்தை கொண்டாடும் பிற நாடுகள் எவை தெரியுமா..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News