வந்தே பாரத் முதல் அம்ரித் பாரத் வரை... பிரதமர் மோடி 3.0 அரசின் முக்கிய திட்டங்கள்..!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 12, 2024, 08:20 AM IST
  • பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்.
  • வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய ஸ்லீப்பர் வகையின் அறிமுகம்.
  • புல்லட் ரயில்களுக்கான 'மேக் இன் இந்தியா' மீதான கவனம்.
வந்தே பாரத் முதல் அம்ரித் பாரத் வரை... பிரதமர் மோடி 3.0 அரசின் முக்கிய திட்டங்கள்..!! title=

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான NDA அரசாங்கத்தின் மூன்றாவது ஆட்சி காலத்தில், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாட்டிற்கான  திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரயில்வே துறையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அமைச்சகங்கள் தங்களின் 100 நாள் திட்டங்கள் தயாரித்து வரும் நிலையில், இந்திய இரயில்வே, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் ஆகிய இரண்டின் திறனையும் அதிகரிக்கத் தயாராகி வருகிறது.

இந்திய ரயில்வே வரும் நாட்களில் நான்கு முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது:

திறன் மேம்ப்பாட்டு திட்டங்கள்: அதிக பயணிகள் பயணிக்கும் வகையிலும் மற்றும் அதிக சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் ரயிலின் திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்தப்படும்.

வெயிட்டிங் லிஸ்ட் என்னும் காத்திருப்புப் பட்டியல்களைக் குறைத்தல்: அதிக ரயில்களை இயக்குவதன் மூலம் நீண்ட காத்திருப்புப் பட்டியலைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

புதிய ரயில்கள் அறிமுகம்: இந்திய இரயில்வேயின் திறனை மேம்படுத்த வந்தே பாரத் (Vande Bharat), அம்ரித் பாரத் மற்றும் வந்தே மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல்: பாதுகாப்பு அமைப்புகளை நவீனமயமாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

நவீனமயமாக்கல்: சாதாரண மற்றும் பிரீமியம் பயணிகளுக்கு ஏற்ற வகையில், பயணிகள் பயணத்தை நவீனமயமாக்குவதை இந்திய ரயில்வே, வலியுறுத்தி வருகிறது. BEML ஆல் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் புதிய ஸ்லீப்பர் வகையின் அறிமுகம் இந்த திசையில் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கையாகும்.

மேக் இன் இந்தியா புல்லட் ரயில்கள்: நடப்பு நிதியாண்டில் உள்நாட்டில் இரு புல்லட் ரயில்களை  ICF உற்பத்தி செய்யும் என இந்திய ரயில்வே கூறியுள்ளது. கட்டண வேறுபாடுகள் காரணமாக ஜப்பானிய சப்ளையர்களுடனான பேச்சுவார்த்தைகளில் தடைகளை எதிர்கொண்ட பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வந்தே பாரத்தின் வேகம் குறைகிறதா... உண்மை நிலை என்ன..!!

இரண்டு ரயில்களும் மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் பாதையில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர் (கிமீ) ஆகும். வந்தே பாரத் பிளாட்பாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் ரயில் பெட்டிகளை விரைவாக தயாரிக்க முடியும் என்றாலும், இந்த நிதியாண்டிற்குள் அவற்றை வழங்குவது சவாலாகவே உள்ளது.

2022ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்ட புல்லட் ரயில் திட்டம், மஹாராஷ்டிராவில் நிலம் கையகப்படுத்தும் சவால்கள் காரணமாக குறிப்பிடத்தக்க வகையில் தாமதமாகியது. 250 கிமீ வேகத்தில் ஓடும் திறன் கொண்ட ரயில்களை உருவாக்குவதற்கான காலக்கெடுவிற்குள் ரயிலை தயாரிப்பது ஐசிஎஃப்-க்கு சவாலான பணியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

சவால்கள் இருந்தபோதிலும், இந்திய ரயில்வே அதன் திறன், பாதுகாப்பு மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளது. புல்லட் ரயில்களுக்கான 'மேக் இன் இந்தியா' மீதான கவனம் உள்நாட்டு உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மேலும் படிக்க | மேகாலயா டூர் செல்ல பிளானா... IRCTC வழங்கும் அசத்தல் பேக்கேஜ் விபரம்..!!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News