இந்தியாவிற்கு எதிராக கூட்டுச்சதி! PoK-வில் பயங்கரவாதிகளை சந்தித்த PLA அதிகாரிகள்!!

சீனாவின் சில ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்பான அல்-பத்ர்-ன் பயங்கரவாதிகளை சந்தித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி அளித்து, இந்த அமைப்பை வலுப்படுத்தி, இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த சீனா முயல்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 1, 2020, 06:33 PM IST
  • தகவல்களின் படி, சீனா, பயங்கரவாத அமைப்பான அல் பத்ர்-ன் உதவியை நாடியுள்ளது.
  • பயங்கரவாத இயக்கங்களின் உதவியுடன், இந்தியாவை எதிர்த்துப் போராட சீனா தயாராகி வருகிறது.
  • இதற்கு முன்னரும் பயங்கரவாத அமைப்பான அல் பத்ர், இந்தியாவில் பல பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக கூட்டுச்சதி! PoK-வில் பயங்கரவாதிகளை சந்தித்த PLA அதிகாரிகள்!! title=

புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிரான தனது தோல்வியை சீனா ஒப்புக்கொண்டுவிட்டதாகவே தெரிகிறது. பலவீனமான நாடுகளின் தோளின் மீது துப்பாக்கியை வைத்து சீனா இந்தியாவை குறி வைப்பது சீனாவின் அச்சத்திற்கு சான்றாக இருக்கிறது. 

இதற்கிடையில், சீனாவின் மற்றொரு சதித்திட்டமும் அம்பலமாகியுள்ளது. தகவல்களின் படி, சீனாவின் சில ராணுவ அதிகாரிகள் (PLA) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK)   உள்ள பயங்கரவாத அமைப்பான அல்-பத்ர்-ன் பயங்கரவாதிகளை சந்தித்துள்ளனர். இந்த பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி அளித்து, இந்த அமைப்பை வலுப்படுத்தி இந்தியாவிற்கு (India) எதிராக தாக்குதல் நடத்த சீனா முயல்கிறது.

ALSO READ: அனகொண்டா ஸ்டைலில் ரயில்.... அமர்க்களப்படுத்திய இந்தியன் ரயில்வே!!

அல்-பத்ர் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இது ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீரில் பல பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த அமைப்பு கார்கில் (kargil) போரின் போதும், பாகிஸ்தான் (Pakistan) ராணுவத்திற்கு உதவியது.

சீனா (China) இப்போது தனது நட்பு நாடான பாகிஸ்தானைப் போல பயங்கரவாதத்தை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான சீனாவின் இந்த புதிய சதி பற்றி 3 முக்கிய விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 

முதலாவதாக, சீனாவும் பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான சீனாவின் 'பயங்கரவாத கூட்டணி'யில் ஈடுபட்டுள்ளன.

இரண்டாவதாக, இந்தியாவுக்கு எதிரான சீனாவின் சதிவேலைக்கான ஏற்பாடுகள் பி.ஓ.கே-வில் நடந்துகொண்டிருக்கின்றன.

ALSO READ: அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் அசத்தும் இந்திய வம்சாவளிப் பெண்!!

மூன்றாவதாக, பயங்கரவாத அமைப்பான அல் பத்ரின் உறுப்பினர்களை சந்தித்துள்ள சீன இராணுவ அதிகாரிகள் தங்கள் சதிவேலைக்கான ஆயத்தங்களை செய்து விட்டனர். 

சீனாவின் இந்த பரபரப்பை புரிந்துகொள்ள முடிகிறது. சதி வேலைகளை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற சீனாவுக்கு இப்போது, இந்தியா பதிலடி அளித்து வருகிறது. சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்கு உலக நாடுகளின் முழுமையான ஆதரவு கிடைத்து வருகிறது. பயங்கரவாதத்தை தனது ஆயுதமாக மாற்ற சீனா முயற்சிக்கிறது. ஆனால் சீனாவின் எந்த சதியாலும் இந்தியாவை ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்துகொள்ள சீனா மறந்துவிட்டது. 

Trending News