டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சலுகை ஆரம்பம்!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் இன்று முதல் 0.75 சதவீதம் தள்ளுபடி.

Last Updated : Dec 13, 2016, 01:14 PM IST
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சலுகை ஆரம்பம்!! title=

புதுடெல்லி: பெட்ரோல் மற்றும் டீசலுக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் இன்று முதல் 0.75 சதவீதம் தள்ளுபடி.

இந்த தள்ளுபடியின் சலுகை உடனடியாக கிடைக்காது. இது கேஷ் பேக் அடிப்படையில், 3 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டம் நேற்று நள்ளிரவு முதல் மத்திய அரசால் இயக்கப்படும் பெட்ரோலிய நிலையங்களில் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 49 காசுகளும், டீசலுக்கு லிட்டர் ஒன்றுக்கு 41 காசுகளும் தள்ளுபடி கிடைக்கும்.

டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 66,10, ஒரு லிட்டர் டீசல் ரூ 54,57 விற்கப்படுகிறது. 

கேஷ் பேக் அடிப்படையில், 3 நாட்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்படும் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Trending News