உங்கள் நகரத்தில் மாசு நிலைமை என்ன? IMD-யின் புதிய வசதி!

நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்கு மத்தியில் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 

Last Updated : Nov 28, 2019, 05:10 PM IST
உங்கள் நகரத்தில் மாசு நிலைமை என்ன? IMD-யின் புதிய வசதி! title=

நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாட்டிற்கு மத்தியில் மக்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 

இப்போது நீங்கள் உங்கள் நகரத்தைப் பற்றிய தகவல்களுக்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில் உங்கள் நகரத்தில் காற்று மாசுபாட்டின் நிலைமை எப்படி இருக்கும்? என்ற தகவலை இந்திய வானிலை ஆய்வு துறை 10 நாட்களுக்கு முன்பே மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த வசதியால், டெல்லி-NCR மட்டுமல்ல, உத்திரபிரதேசம்-பீகார், ராஜஸ்தான், வட இந்தியாவில் ஹரியானா உள்ளிட்ட ஒரு 12 மாநிலங்களைச் சேர்ந்த கோடி கணக்கான மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வசதி சோதனை முறையில் இருப்பதாகவும், விரைவில் ஆன்-லைன் மூலம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக இந்திய வானிலை ஆய்வு மையம் பூமி அறிவியல் அமைச்சகம் மற்றும் புனேவின் இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனம் இணைந்து ஒரு புதிய மாதிரியை உருவாக்கியுள்ளது, இந்த மாதிரி சுமார் 10 நாட்களுக்கு முன்பு உங்கள் நகரத்தின் மாசுப்பாட்டு நிலைமையினை உங்களுக்கு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வுத் துறையின் இந்த வசதி மக்களுக்கு மிகுந்த நிம்மதியளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகிறது, ஏனெனில் நகரத்தின் காற்று மாசுபாடு குறித்து முன்னரே தெரிந்துவிட்டால் மக்கள் தங்கள் உடல்நலம் குறித்து விழிப்புடன் இருப்பார்கள், முகமூடி போன்ற ஏற்பாடுகளைச் செய்வார்கள். 

முன்னதாக, நகரத்திற்கு 72 மணிநேர முன்கூட்டியே கணிப்புகளை வெளியிடுவதற்கான ஒரு நுட்பம் இருந்தது, ஆனால் இப்போது அது 10 நாட்களுக்கு முன்பு கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாதிரியுடன் தொடர்புடைய வானிலை விஞ்ஞானி டாக்டர் வி.கே.சோனி கருத்துப்படி, இந்த அமைப்பு ஆன்லைனில் மாறிவிட்டது. 72 மணி நேர முன்னறிவிப்பைப் போலவே 10 நாள் முன்னறிவிப்பு துல்லியமாக இருக்குமா என்பதை இந்த நேரத்தில் பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Trending News