பிரதமர் மோடி மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்: அமித் ஷா புகழாரம்

Amit Shah on PM Modi: பிரதமர் மோடியை எப்படி புரிந்து கொள்ள முடியும் என்று அமித் ஷா கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்காமல், முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 11, 2022, 06:43 PM IST
  • பிரதமர் நரேந்திர மோடியை முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
  • நாட்டு மக்கள் பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் இதயத்தில் இருந்து நேசிக்கிறார்கள்.
  • மோடி அரசு மக்கள் விரும்பும் முடிவுகளை எடுப்பதில்லை - அமித் ஷா.
பிரதமர் மோடி மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர்: அமித் ஷா புகழாரம் title=

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமை "அனைத்தும் உள்ளடக்கிய வளர்ச்சி"க்காக தொடர்ந்து பணியாற்றி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டி பேசினார். மேலும் இந்த நாட்டு மக்கள் அவர் (பிரதமர் மோடி) மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியை வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்காமல், அவரது அரசியல் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். மேலும் நாட்டு மக்கள் அவரை தங்கள் இதயத்தில் இருந்து நேசிக்கிறார்கள் என்றார். அந்த அரசியல் குடும்பப் பின்னணி இல்லாமல் அவர் தேசத்தின் தலைவராக உருவானது மிகவும் குறிப்பிடத்தக்கது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

பல கட்டுக்கதைகளை உடைத்த பாஜக:
"மோடி @20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி" புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சர், "இந்தி பேசும் மாநிலங்களின் கட்சி" என்ற பல கட்டுக்கதைகளை உடைத்து, "மோடியின் தலைமையில், பாரதியா ஜனதா கட்சி நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் அடைந்துள்ளது.

மேலும் படிக்க: மக்கள் தொகை கணக்கெடுப்பு: e-census குறித்து அறிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாஜகவை நகர்ப்புறக் கட்சி என்றார்கள். ஆனால் கிராமம் கிராமமாக வெற்றி பெற்றோம். இந்த கட்டுக்கதையை உடைத்தோம். இது விவசாயிகளின் கட்சி அல்ல என்றார்கள். ஆனால் கூட்டுறவு சங்கங்களில் பாஜக வெற்றி பெற்று விவசாயிகள் எங்களுக்கு வாக்களித்தபோது இந்த கட்டுக்கதையும் உடைந்தது. 

பாரதிய ஜனதா கட்சி கிழக்கிலிருந்து மேற்கு, வடக்கிலிருந்து தெற்கு என பரவி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சி என்பதும், மோடியின் தலைமையில் நடந்தது என்பதும் இப்போது உறுதியாகி விட்டது.

 

மோடி அரசு மக்கள் விரும்பும் முடிவுகளை எடுப்பதில்லை. மக்களுக்கு நன்மை பயக்கும் முடிவுகளை எடுப்பதில் அக்கறை காட்டுகிறது என்று அமித் ஷா கூறினார்.

மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி வென்றார்:
கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி சமமான அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஒரே தலைவர் பிரதமர் மோடி மட்டுமே என்று ஷா கூறினார். மோடியின் தலைமையில் பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்து, அதிக மாநிலங்களில் ஆட்சி செய்யும் கட்சியாக உருவெடுத்துள்ளது என்றார். இந்திய மக்கள் பிரதமர் மோடியை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டதையும், இதயத்தில் இருந்து அவரை நேசிப்பதையும் இது காட்டுகிறது. மக்களின் நம்பிக்கையை பிரதமர் மோடி வென்றுள்ளார் என்றார்.

மேலும் படிக்க: இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மோடி போன்ற சாதனையை எந்தத் தலைவராலும் செய்யமுடியவில்லை:
மோடியின் வெளியுறவுக் கொள்கையானது, அனைத்து நாடுகளும் இந்தியாவுடன் நட்புறவை ஏற்படுத்த விரும்புவதன் மூலம், நமது முதன்மை இலக்கு இந்தியாவின் பாதுகாப்பே என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த ஏழு தசாப்தங்களில் இதுபோன்ற ஒரு சாதனையை எந்தத் தலைவராலும் செய்யப்படவில்லை என்றார்.

வறுமை முதல் பிரதமர் வரை மோடியின் பயணம் மிகவும் போராட்டமானது:
பிரதமர் நரேந்திர மோடியை அறிந்து கொள்ள, அவரது முழு வாழ்க்கையையும் பார்க்க வேண்டியது அவசியம் என்று ஷா கூறினார். பிரதமர் மோடியின் 20 ஆண்டுகளுக்கு அரசியல் வாழ்க்கைக்கு முன் அவரின் 30 ஆண்டு கால அனுபவத்தை ஆய்வு செய்வது அவசியம். ஐந்து தசாப்தங்களாக மோடி ஜியின் பொது வாழ்க்கை, வறுமையின் முற்றத்தில் இருந்து பிரதமராகும் வரையிலான பயணம் மிகவும் போராட்டமானது. 'மோடி@20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற புத்தகம், இந்தியாவின் அனைத்துத் துறை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, குறிப்பாக சமூக சேவை மற்றும் அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு, 'பகவத்கீதை' போல் இருக்கும் என்றார்.

மேலும் படிக்க: அஸ்ஸாம் - மேகாலயாவின் 50 ஆண்டு எல்லைப் பிரச்சனையை தீர்க்கும் வரலாற்று ஒப்பந்தம்!

பஞ்சாயத்து நடத்திய அனுபவம் கூட பிரதமர் மோடிக்கு இல்லை:
சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் மிகவும் பிரபலமான தலைவர் பிரதமர் மோடி என்று ஷா கூறினார். குஜராத் முதல்வராக பதவியேற்றபோது, ​​பஞ்சாயத்து நடத்திய அனுபவம் கூட பிரதமர் மோடிக்கு இல்லை. இருந்த போதிலும், அவர் தொடர்ந்து வெற்றி பெற்று மாநிலத்தை மிகவும் திறமையாக நடத்தினார். 

மோடி ஜியின் ஐந்து தசாப்த கால பொது வாழ்வை பேசும் புத்தகம்:
இன்று என் முன்னால் இருப்பவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக பிரதமர் மோடியை தெரியும். அவரது வெற்றிகரமான 20 ஆண்டுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்தியாவிலும் குஜராத்திலும் அவருடைய தலைமையின் வித்தியாசத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மோடி ஜியின் ஐந்து தசாப்த கால பொது வாழ்வின் பயணம் இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ளது என்றார்.

மேலும் படிக்க: ஊடகங்களை பார்த்து பயந்தாரா மோடி? உண்மை என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News