நாடாளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கி அடுத்த மாதம் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெறும்.
இந்த கூட்டத்தில் 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. இதனையடுத்து நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டிய மத்திய அரசு நாடாளுமன்ற கூட்டத்தொடரை நன்றாகவும், சுமுகமாகவும், ஆக்கபூர்வமாகவும் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
நாட்டின் பொருளாதாரம், ஜி.எஸ்.டி வரியால் ஏற்பட்ட பாதிப்புகள், ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள், மீனவர்கள் பிரச்சனை, விவசாயிகளின் பிரச்சனை உட்பட பல முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
Took part in the all-party meeting in Delhi this evening. pic.twitter.com/1ZeVaOYCMP
— Narendra Modi (@narendramodi) December 14, 2017