தாந்தேவாடா: சத்தீஸ்கரில் (Chattisgarh) கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட தாந்தேவாடா மாவட்டத்தில் ஒரு போலீஸ்காரரின் (Policeman) பெற்றோரை நக்சல்கள் கடத்திச் சென்றதாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
குமியாபால் கிராமத்தில் உள்ள மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG) கான்ஸ்டபிள் அஜய் தேலமின் (Constable Ajay Telam) வீட்டிற்கு நக்சலைட்டுகளின் குழு ஒன்று திங்கள்கிழமை இரவு வந்ததாகவும், அவரது தந்தை லச்சு தேலம் (64) மற்றும் தாய் விஜ்ஜோ தேலம் (62) ஆகியோரை கடத்திச் சென்றதாகவும் தாந்தேவாடா காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்தார்.
அவர்கள் கான்ஸ்டபிளின் சகோதரியையும் அடித்து, அந்த இடத்திலிருந்து தப்பிச் செல்வதற்கு முன்பு அவரது மொபைல் போனையும் பறித்துச் சென்றனர்.
கடந்த ஆண்டு மாநில காவல்துறையின் நக்சல் எதிர்ப்பு அமைப்பான டி.ஆர்.ஜி.யில் சேர்க்கப்பட்ட அந்த கான்ஸ்டபிள், தாந்தேவாடாவில் (Dantewada) உள்ள தனது பிரிவு முகாமில் தங்கியிருப்பதால், சம்பவம் நடந்தபோது அவர் வீட்டில் இல்லை.
கடந்த மாதம் மாவட்ட காவல்துறையினர் லோன் வர்ராட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்த பின்னர் நக்சல்கள் (Naxals) எரிச்சலடைந்ததாகத் தெரிகிறது. இந்த பிரச்சாரத்தின் கீழ், பிடித்துக் கொடுத்தால் வெகுமதி என அறிவிக்கப்படிருக்கும் சுவரொட்டிகளும் பதாகைகளும் கிராமங்களில் வைக்கப்பட்டதாக பல்லவா என்ற அதிகாரி கூறினார்.
சுவரொட்டிகள் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றன. மேலும் கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களை விட்டு சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் கோருகின்றன.
ALSO READ: மூன்று ஆண்டுகளாக துப்பாக்கி முனையில் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்!
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, காவல்துறையினர் சமீபத்தில் குமியபால் கிராமத்தில் சில நக்சல்களின் சுவரொட்டிகளை வைத்தனர். அதைத் தொடர்ந்து 15 முதல் 20 அல்ட்ராக்கள் சரணடைய போலீஸைத் தொடர்பு கொள்ள முயன்றனர் என்று அந்த அதிகாரி கூறினார்.
"இப்படி நடப்பதை விரும்பாத சில நக்சல்கள் இதற்கு அஜய் தேலம்தான் காரணம் என சந்தேகித்து, அவரது குடும்பத்தினரை குறிவைத்தனர்," என்று அவர் கூறினார்.
கான்ஸ்டபிளின் பெற்றோருக்காக தேடுதல் நடைபெற்று வருவதாகவும், அவர்களை விடுவிப்பதற்காக உள்ளூர் மக்களின் உதவியை காவல்துறையினர் கோரி வருவதாகவும் அவர் கூறினார்.
பஸ்தார் பிராந்தியத்தில் தங்கள் ஆதரவு தளத்தை இழந்து வரும் நக்சல்களின் விரக்தியை இந்த சம்பவம் காட்டுகிறது என்று பல்லவா கூறினார். அவர்கள் விரக்தியால் காவல்துறை ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை குறிவைக்கின்றனர் என்றார் அவர்.
கடந்த வாரம், தாந்தேடேவாடாவின் ஹிரோலி கிராமத்தில் நக்சல்கள் ஒரு போலீஸ்காரரின் மைத்துனரைக் கொன்றதாகவும் அவர் தெரிவித்தார்.