உண்மையிலே நீங்கள் இந்தியரா? என்ற கேள்வியை விமானநிலையத்தில் எதிர்க்கொண்ட பெண்ணுக்கு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் பதில் அளித்து உள்ளார்.
மணிப்பூரை சேர்ந்த பெண் பயணி மோனிகா கான்கெம்பம் புதுடெல்லி சர்வதேச விமானநிலையத்தில் குடியுரிமை அதிகாரிகளால் “நீங்கள் உண்மையிலே இந்தியரா?” என்ற இனபேத கேள்விக்கு ஆளானது தொடர்பாக பேஸ்புக் பகுதியில் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளார். மோனிகாவின் பேஸ்புக் குற்றச்சாட்டு சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து மத்திய அரசே பதில் அளித்து உள்ளது.
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் பக்கத்தில்:- மோனியா கான்கெம்பம் - நான் வருந்துகின்றேன், குடியுரிமை என்னுடைய பொறுப்பில் இல்லை. என்னுடைய மூத்த சகா ராஜ்நாத் சிங்கிடம் விமானநிலையத்தில் உள்ள குடியுரிமை அதிகாரிகள் தொடர்பாக பேசுகின்றேன் என்று கூறி உள்ளார். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந் கம்யூனிகேஷன்ஸ் நிர்வாகியும், பெண்கள் ஆர்வலருமான மோனியா சியோல் செல்ல விமானநிலையம் சென்றபோது இச்சம்பவம் நடைபெற்று உள்ளது.
மோனிகா பேஸ்புக்கில் வெளியிட்டு பதிவில்:- "என்னுடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்த குடியுரிமை அதிகாரி ஒருவர், உங்களை பார்த்தால் இந்தியர் மாதிரி தெரியவில்லை 'உண்மையிலே நீங்கள் இந்தியரா?' என கிண்டலாக கேட்டார். நான் அதற்கு பதில் சொல்லவில்லை. பின்னர் என்னிடம் 'இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?' என்று கேள்வி எழுப்பினார். அடுத்த கவுண்டரில் நின்ற பெண்மணி சிரித்தார். நான் எனக்கு தாமதமாவதாக தெரிவித்தும், அவர் எந்தஒரு பணியையும் முன்னெடுக்கவில்லை. என்னுடைய சொந்த மாநிலத்தை நான் தெரிவித்ததும், மணிப்பூர் மாநிலத்தை ஒட்டி எத்தனை மாநிலங்கள் உள்ளன? அவைகளின் பெயர் என்ன? என்ற கேள்விக்கு பதில் கூறிவிட்டு செல்லுமாறு கூறினார். நான் என்னுடைய நிலையை முற்றிலும் இழந்துவிட்டேன், அக்கம் பக்கத்தை பார்த்துக் கொண்டு இருந்தேன், என்னுடைய கண்கள் அங்கும் இருக்கும் உருண்டது மற்றும் பதில் அளிக்கவில்லை. ஆனால் நான் பதில் அளிக்கவேண்டும் என்றே அவர் வற்புறுத்தினார், என்று இனபேதத்துக்கு ஆளான சம்பவத்தை விவரித்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு சமூக வலைதளத்தில் பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக மோனிகாவின் பதிவை பகிர்வு செய்து உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.