"பாகிஸ்தான் ஜிந்தாபாத்" மாணவி அமுல்யா மீது தேசத்துரோக வழக்கு.. 14 நாட்கள் காவல்..

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்று கோஷம் எழுப்பிய பெங்களூரு மாணவி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 21, 2020, 10:34 AM IST
  • பெங்களூரில் ஒவைசியின் பேரணியில் பாகிஸ்தானின் ஜிந்தாபாத் முழக்கமிட்டதை அடுத்து சலசலப்பு ஏற்பட்டது
  • அமுல்யா என்ற பெண் கோஷங்களை எழுப்பினார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்
  • குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு எதிரான பேரணியில் கோஷங்கள்.
  • இதுபோன்றவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள், அவர்கள் நாட்டை நேசிப்பதில்லை என்று ஒவைசி கூறினார்
"பாகிஸ்தான் ஜிந்தாபாத்" மாணவி அமுல்யா மீது தேசத்துரோக வழக்கு.. 14 நாட்கள் காவல்.. title=

பெங்களூரு: குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு பேரணியில் பெங்களூரு மாணவி ஒருவர் "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" (Pakistan Zindabad) கோஷங்களை எழுப்பினார். அந்த பெண் மீது பெங்களூரு போலீசார் தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளனர். அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். அமுல்யா என்ற பெண் நேற்று (வியாழக்கிழமை) பேரணியின் மேடையில் இந்த கோஷங்களை எழுப்பினார். இந்த பேரணியை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி (Asaduddin Owaisi) ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் நடைபெறும் போது, தன்னைத் தூர விலக்கிக் கொண்டு, இந்த மாணவிக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஓவைசி கூறினார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை ஓவைசி கண்டித்தார். நமாஸ் படிக்க செல்லும் போது தான், அந்த பெண் கோசத்தை எழுப்பினார் என்றும், அதை நான் கண்டித்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பேசிய ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்.பி., ஓவைசி, "கோஷங்களை கடுமையாக கண்டித்து, 'நான் ஓடி வந்தேன். இந்த முழக்கங்களைக் கேட்டவுடனேயே நான் முன்னால் சென்று அவரைத் தடுத்தேன். அவர் அங்கிருந்து அகற்றப்பட்டார். அத்தகையவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள். அவருக்கு நாட்டு மீது எந்த அன்பும் இல்லை. அவர்கள் இதைச் செய்ய விரும்பினால், வேறு இடத்திற்குச் செல்லுங்கள், நீங்கள் ஏன் இதை இங்கே செய்கிறீர்கள். இந்த வகையான விஷயத்தை நான் கண்டிக்கிறேன். இந்த வகை நடவடிக்கை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்படாது. இது குறித்து காவல்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

 

அமுல்யாவின் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷமிடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது. அசாதுதீன் ஒவைசி மேடைக்கு மேடையில் இருந்து கீழே இறங்கும் போது அமுல்யா பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் கோஷங்களை மைக் முன்னாடி கத்தத் தொடங்குகிறார் என்பது வீடியோவில் காணப்படுகிறது. இதைக் கேட்ட ஓவைசி உடனடியாக அவரை தடுக்கிறார். ஆச்சரியத்தின் வெளிப்பாடுகள் அவரது முகத்தில் தெரியும். அந்த பெண்ணை அகற்ற அவர் மேடைக்குத் திரும்புகிறார். அப்போது அவரது ஆதரவாளர்கள் சிலர் அமுல்யாவிடமிருந்து மைக்கைப் பறிக்கிறார்கள். இதற்குப் பிறகும் அமுல்யா பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் எழுப்பிய படியே இருக்கிறார். ஒவைசியின் ஆதரவாளர்கள் அவரை மேடையில் இருந்து அகற்ற முற்படுகிறார்கள். இதற்கிடையில் சில போலீஸ்காரர்களும் அங்கு வருகிறார்கள். பின்னர் அமுல்யா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் ஆதரவு கோஷமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அமுல்யா பெங்களூரில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் அவர் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

Trending News