உலகில் மாண்டுபோகும் 5 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளில் கால்வாசிப்பேரின் மரணத்துக்கு மோசமான சுற்றுச்சூழல் மாசுபாடு தான் காரணம் என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பாதுகாப்பாற்ற குடிநீர், சுகாதாரமின்மை, சுகாதாரமற்ற பழக்க வழக்கங்கள், வீடு மற்றும் சுற்றுப்புற மாசுபாடுகள் ஆகியவை தான் பெரும் பங்கு வகிப்பதாய் உலக சுகதார நிறுவனம் தெரிவித்தது.
குறிப்பாக காற்று மாசுபாடு காரணமாக நிமோனியா, சுவாச கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள், வாதம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மாசுபாட்டால் பொதுவாக குழந்தைகளை பாதிக்கும் வயிற்றுப் போக்கு, மலேரியா, நிமோனியா போன்ற நோய்கள் வருகின்றன.
சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஆண்டுதோறும் 5 வயதிற்கு உட்பட்ட 17 லட்சம் குழந்தைகள் பலியாகி வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.