குஜராத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை செல்லக்கூடும் என்பதால், “ஆரஞ்சு அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது!!
இந்தியா முழுவதும் கோடை காலம் துவங்கி கடும் வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகின்ற நிலையில், பல்வேறு மாநிலங்களுக்கு மோசமான வெயில் குறித்து எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
குஜராத்தில் வெயில் கொளுத்தும் நிலையில், வெப்ப அலைகள் வீசக்கூடும் என்பதால் நேற்றும் இன்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காந்திநகர், அகமதாபாத், சூரத், பனஸ்கந்தா, சபர்கந்தா உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலைகளின் தாக்கம் இருக்கக்கூடும் என அகமதாபாத் மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நோயாளிகள், சிறார்கள், முதியவர்கள் வெளியே செல்லும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறும், உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.