புது தில்லி: ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக ‘ஆபத்தான நிலை’யில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ள நாடுகளைச் சேர்ந்த மேலும் நான்கு பயணிகள், வியாழக்கிழமை, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தபோது, அவர்களுக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 மணியளவில் தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானத்தில் இருந்த 243 பேரில் மூன்று பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லண்டனில் இருந்து வந்த விமானத்தில் 195 பேருடன் பயணித்த மேலும் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) 'கவலையளிக்கும் கோவிட் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்ட புதிய மாறுபாடான ஓமிக்ரான், இந்த பயணிகளுக்கு உள்ளதா என ஆய்வு செய்ய இந்த நால்வரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கான தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மேலும் கூறுகையில், ''ஓமிக்ரானைக் (Omicron https://zeenews.india.com/tamil/india/international-flights-service-not-to-resume-from-december-15-due-to-omicron-threat-376555) கருத்தில் கொண்டு வெளிநாட்டிலிருந்து வரும் ஒவ்வொரு பயணிக்கும் ஆர்டி-பிசிஆர் சோதனை விமான நிலையத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 4 கோவிட்-பாசிட்டிவ் பயணிகள் LNJP மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நால்வருக்கு பரிசோதனை நடந்து வருகிறது.” என்றார்.
ALSO READ:ஒமிக்ரான் 23 நாடுகளில் நுழைந்து விட்டது; WHO வெளியிட்டுள்ள பகீர் தகவல்
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சர்வதேச பயணிகளுக்கான கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வந்ததில் இருந்து 'ஆபத்தில் உள்ள' நாடுகளைச் சேர்ந்த மொத்தம் எட்டு பேருக்கு கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவிட் (COVID-19) உறுதி செய்யப்பட்ட எட்டு பயணிகளும், கோவிட் போன்ற அறிகுறிகள் இருந்த மேலும் இரு பயணிகளும் லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அத்தகைய நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கூற்றுப்படி, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா, மொரிஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் "ஆபத்தில் உள்ள நாடுகள்" என குறிப்பிடப்பட்டுள்ளன.
புதிய விதிமுறைகளின் கீழ், "ஆபத்தில் உள்ள" நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு RT-PCR சோதனைகள் கட்டாயமாகும். இந்த பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்னரே அவர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும், பிற நாடுகளில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளில் ஐந்து சதவீதம் பேர் தோராயமாக சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ALSO READ: WHO: குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு; சோதனை விகிதங்களே Omicron வேரியண்ட்டுக்கு காரணமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR