மீண்டும் வருகிறதா Old Pension Scheme? ரயில்வே ஊழியர்கள் வைத்த கோரிக்கை!!

Old Pension Scheme: சமீபத்தில் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இரயில்வே ஊழியர்கள் பல்வேறு வழிகளில் புதிய ஓய்வூதியத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 25, 2023, 08:42 AM IST
  • ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள் என்ன?
  • இரயில்வே ஊழியர்கள் பல்வேறு வழிகளில் புதிய ஓய்வூதியத்துக்கு எதிராக போராடி வருகின்றனர்.
  • பல மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன.
மீண்டும் வருகிறதா Old Pension Scheme? ரயில்வே ஊழியர்கள் வைத்த கோரிக்கை!! title=

ஓய்வூதியத் திட்டம்: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து சமீபத்திய நாட்களில் பல வித விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இதனிடையே, பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பல்வேறு அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன. ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களின் தொழிற்சங்கமான இந்திய ரயில்வேயின் தேசிய கூட்டமைப்பு (என்எப்ஐஆர்) அதன் 236வது செயற்குழு கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (என்பிஎஸ்) ரத்து செய்யவும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) மீட்டெடுக்கவும் கோரியுள்ளது.

என்.பி.எஸ்

10 லட்சம் ஊழியர்களைக் கொண்ட ரயில்வேயில் உள்ள என்எப்ஐஆர் இணைந்த தொழிற்சங்கங்கள் என்பிஎஸ்-ஐ எதிர்க்கின்றன. என்எப்ஐஆர் பொதுச்செயலாளர் எம் ராகவய்யா, '2004 ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்களுக்கு, என்பிஎஸ் மூலம், ஓய்வு பெற்ற பிறகு, தங்களுக்கு எந்த சமூகப் பாதுகாப்பும் கிடைக்காது என்ற கவலையும் மன உளைச்சலும் உள்ளது.' என்று கூறினார்.

ரயில்வே ஊழியர்களின் கோரிக்கைகள்

இரயில்வே ஊழியர்கள் பல்வேறு வழிகளில் புதிய ஓய்வூதியத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்கு முன்னர் நியமிக்கப்பட்ட தங்கள் சக ஊழியர்களுக்கு இணையாக, பழைய ஓவய்வூதியத் திட்டமே தங்களுக்கும் அமல்படுத்தப்பட வேண்டும் என கோருகின்றனர். பழைய ஓவய்வூதியத் திட்டத்தை திரும்ப கொண்டு வரவேண்டும் என ரயில்வே ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | IRCTC: ஹோலி பண்டிகைக்கு ரயிலில் சொந்த ஊருக்கு போறீங்களா? டிக்கெட் கன்பார்ம்

பல மாநிலங்கள் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன

சமீப காலங்களில், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேச அரசுகள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றி, அதற்கு பதிலாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடிவு செய்தன. மேற்கு வங்க அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே தொடர்ந்தது. அதே நேரத்தில், அரசாங்கத்திற்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையிலான மோதலைத் தவிர்க்க, புதிய ஓய்வூதியத் திட்டத்தை மதிப்பாய்வு செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர என்எஃப்ஐஆர் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக (ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்கமுடியாது என கூறியுள்ளார். 'ஏதாவது காரணத்திற்காக மத்திய அரசிடம் இருந்து என்பிஎஸ் நிதியை பெறலாம் என மாநிலங்கள் முடிவு செய்தாலும், அது நடக்காது’ என்று நிதி அமைச்சர் கூறினார். இது பல மாநில அரசுகளுக்கு பெரும் அதிர்ச்சியாக வந்துள்ளது. 

மேலும் படிக்க | Old Pension Scheme: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுத்த அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News