தற்போது கடன் தள்ளுபடி என்பது பேஷன் ஆகி விட்டது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
இதைக்குறித்து அவர் கூறியது, கடன் தள்ளுபடி தற்போது பேஷன் ஆகிவிட்டது. கடன்கள் தள்ளுபடி செய்ய வேண்டியதுதான், ஆனால், கடன்கள் மிகவும் முடியாத பட்சத்தில் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட வேண்டும். கடன் தள்ளுபடி இறுதி தீர்வாகாது. ஆனால் ஆனால் தற்போது விவசாயத்தை தக்கவைக்க இது அவசியமாகிறது என அவர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி விவசாயக் கடன் தள்ளுபடி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.